ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா (Hero Vida) பிராண்டின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் முந்தைய V1 மாடல்களுக்கு பதிலாக புதிய V2 வரிசை விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது கூடுதலாக இந்த வரிசையில் V2 லைட் மாடல் ஆனது சேர்க்கப்பட்டு விலை குறைவானதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மற்றபடி அடிப்படையான டிசைன அமைப்பில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை நிறங்களிலும் அதேபோல அமைந்திருக்கின்றது. கூடுதலாக விடா வி2 லைட் வேரியண்டில் 2.2Kwh ஆனது சேர்க்கப்பட்டிருக்கின்றது. அதேபோல வி2 ப்ளஸ் மற்றும் வி2 ப்ரோ மாடல்களின் டாப் ஸ்பீட் ஆனது முந்தைய மாடல் விட மாறுபட்டதாகவும் அதே நேரத்தில் சார்ஜிங் வேகம் மாறுபட்டு இருக்கின்றது.
Vida V2 Pro
வி1 புரோ மாடலின் பேட்டரி அமைப்பினை பெற்றிருந்தாலும் வி2 புரோ மாடலின் டாப் ஸ்பீடு 90 கிமீ ஆக உயர்த்தப்பட்டு 3.4Kwh பேட்டரி ஆனது தொடர்ந்து 2×1.97 Kwh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் நிகழ்யேரத்தில் 116 கிமீ கிடைக்கும். வி2 புரோவில் ப்ளூ, கருப்பு, சிவப்பு, சியான் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறங்கள் உள்ளன.
Eco, Ride, Sport, Custom என நான்கு ரைடிங் மோடுகளை பெற்று அதிகபட்சமாக 6 KW பவர் மற்றும் 25 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் பெற்று 0-80 % சார்ஜிங் பெற 5 மணி நேரம் 55 நிமிடங்கள் தேவைப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
VIda V2 Plus
வி1 பிளஸ் மாடலின் பேட்டரி அமைப்பினை பெற்றிருந்தாலும் வி2 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆக அதிகரிக்கப்பட்டு 3.44Kwh பேட்டரி ஆனது தொடர்ந்து 2×1.7 Kwh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 100 கிமீ உண்மையான ரேஞ்ச் கிடைக்கும். வி2 பிளசில் கருப்பு, சிவப்பு, சியான் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறங்கள் உள்ளன.
Eco, Ride, Sport என மூன்று ரைடிங் மோடுகளை பெற்று அதிகபட்சமாக 6 KW பவர் மற்றும் 25 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் பெற்று 0-80 % சார்ஜிங் பெற 5 மணி நேரம் 15 நிமிடங்கள் தேவைப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Vida V2 Lite
புதிதாக வந்துள்ள விடா வி2 லைட் மாடலில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விடா Z ஸ்கூட்டரில் இடம்பெற உள்ள 2.2Kwh பேட்டரி ஆப்ஷனை இந்த புதிய மாடல் பெறுகின்றது. ஒற்றை பேட்டரி பெற்றிருந்தாலும் ஸ்வாப் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
வி2 லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 69 கிமீ ஆக உள்ள நிலையில் IDC ரேஞ்ச் 94 கிமீ ஆக கூறப்பட்டாலும் நிகழ் நேரத்தில் ஈகோ மோடில் கிடைக்கின்ற உண்மையான ரேஞ்ச் 69 கிமீ என உறுதியாகியுள்ளது.
Eco, Ride என இரு ரைடிங் மோடுகளை பெற்று அதிகபட்சமாக 6 KW பவர் மற்றும் 25 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் பெற்று 0-80 % சார்ஜிங் பெற 3 மணி நேரம் 15 நிமிடங்கள் தேவைப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவு சார்ஜரை பயன்படுத்தினால் 1 நிமிடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் பயணிக்கலாம். வி2 லைட்டில் கருப்பு, சிவப்பு ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறங்கள் உள்ளன.
இந்த விடா வி2 லைட் ஸ்கூட்டரின் விலை ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக துவங்குவதுடன் சமீபத்தில் வந்த ஹோண்டா QC1, ஆக்டிவா இ, ஓலா S1Z, டிவிஎஸ் ஐக்யூப், மற்றும் பஜாஜ் சேட்டக், ஏதெர் ரிஸ்டா உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.
Vida V2 vs Vida V1 Specs comparison