சர்வதேச சந்தைக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் பிராண்டை V1 புரோ ஸ்கூட்டர் மற்றும் வி1 புரோ கூபே என இரு மாடல்களை கொண்டு வருவதுடன் டர்ட் எலக்ட்ரிக் பைக்குகளை கொண்டு வரவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
பொதுவாக இரண்டு இருக்கை அமைப்பினை கொண்ட வி1 புரோ ஸ்கூட்டரில் உள்ள ஒற்றை இருக்கையை நீக்கிவிட்டு கூபே வகையில் ஒற்றை இருக்கை மட்டும் வழங்கப்படதாகவும் கிடைக்க உள்ளது.
Vida V1 Pro escooter
வி1 புரோ ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல், பூஸ்ட் மோட், கீலெஸ் இக்னிஷன் மற்றும் 7 இன்ச் டிஎஃப்டி டச் ஸ்கிரீன் ஆகியவை கொண்டுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 0-40kmph வேகத்தை எட்டுவதற்கு 3.2 வினாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும். Eco, Ride, Sport மற்றும் கஸ்டம் என நான்கு விதமான ரைடிங் முறைகளுடன் அதிகபட்சமாக 80kmph வேகத்தை வழங்குகிறது.
இரண்டு பிரிவாக ஸ்வாப்பிங் செய்யக்கூடிய 3.94kWh பேட்டரி பெற்ற வி1 புரோ மாடலின் உண்மையான ரைடிங் ரேஞ்சு 95 கிமீ மற்றும் 105 கிமீ வரை வழங்குகின்றது.
கூடுதலாக வரவிருக்கும் வி1 புரோ கூபே ஒற்றை இருக்கை மட்டுமே பெற்றிருக்கும். ஆனால் தொழில் நுட்பவிபரங்களில் எந்த மாற்றங்களும் இருக்காது.
இதுதவிர, விடா ஏக்ரோ மற்றும் லினக்ஸ் என இரு டர்ட் எலக்ட்ரிக் பைக் அட்வென்ச்சர் மாடல் கான்செப்ட் நிலையில் EICMA 2023 அரங்கில் காட்சிப்படுத்தியுள்ளது.
மேலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மற்ற பெட்ரோல் மாடல்களான ஜூம் 160 , ஜூம் 125 ஆர் ஆகியவை காட்சிப்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டின் மத்தியில் இங்கிலாந்து, ஃபிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் என மூன்று நாடுகளில் முதற்கட்டமாக ஹீரோ வி1 புரோ ஸ்கூட்டர் இந்திய சந்தையில் உள்ளதை போன்றே ஸ்வாப் செய்யும் வகையில் 2 பேட்டரி கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.