இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் 2020 ஆம் ஆண்டு மிக கடுமையான சவால் நிறைந்ததாக விளங்கி வரும் நிலையில், இரு சக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு வெளியான பேட்டரி ஸ்கூட்டர்களின் பட்டியலை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளை பொருத்தவரை, குறிப்பிட்ட சில மாநகரங்களில் மட்டுமே பெரும்பாலான நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. ஒரு சில நிறுவனங்கள் ஹீரோ எலக்ட்ரிக், ஆம்பியர், ஒகினாவா என ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே அதிகப்படியான டீலர்கள் எண்ணிக்கையை கொண்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மின்சார வாகன விற்பனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான முன்னணி நகரங்களில் டீலர்கள் துவங்கப்படலாம்.
ஏத்தர் 450X
இந்திய சந்தையில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனமாக ஏத்தர் விளங்குகின்றது. இந்நிறுவனத்தின் முந்தைய வெற்றி மாடல்களான 340 மற்றும் 450 ஆகியவற்றினை தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 450X மற்றும் 450 பிளஸ் சிறப்பான முன்பதிவு எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
85 கிமீ அதிகபட்ச நிகழ்நேர ரேஞ்சு வழங்குகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஏத்தர் மாடல் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் விளங்குகின்றது. தமிழகத்தில் சென்னை, கோவை மாநகரங்களில் கிடைக்கின்றது.
தமிழக ஆன்-ரோடு விலை ஏத்தர் 450X பிளஸ் விலை ரூ.1,41,786 மற்றும் 450X விலை ரூ.1,60,796
பஜாஜ் சேட்டக்
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சேட்டக் ரெட்ரோ ஸ்டைலை பெற்ற மாடலாக விளங்குகின்றது. ஈக்கோ மோடில் பயணித்தால் 95 கிமீ ரேஞ்சு வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ள ஸ்கூட்டரில் அர்பன் மற்றும் பிரீமியம் என இரு விதமான வேரியண்டுகள் கிடைக்கின்றது.
பெங்களூரு, புனே நகரங்களில் மட்டும் கிடைக்கின்ற பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரின் விலை ரூ.1,15,000 மற்றும் பிரீமியம் வேரியண்ட் விலை ரூ.1,20,000 (எக்ஸ்ஷோரூம்) ஆகும்.
டிவிஎஸ் ஐக்யூப்
பல்வேறு வசதிகளை பெற்ற மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 40 கிமீ வேகத்தில் பயணிக்கும் ஈக்கோ மோட் மூலம் 75 கிமீ ரேஞ்சு வழங்குவதுடன், அதிகபட்ச வேகம் மணிக்கு 78 கிமீ வேகத்தில் பயணித்தால் அனேகமாக 60-65 கிமீ ரேஞ்சு வழங்கலாம்.
பெங்களூருவில் மட்டும் கிடைக்கின்ற டிவிஎஸ் ஐகியூப் ஸ்கூட்டரின் விலை ரூ.1,15,000 (ஆன்-ரோடு)
பிகாஸ் A2 & B8
ஆர்ஆர் குளோபல் நிறுவனத்தின் பிகாஸ் எலக்ட்ரிக் பிராண்டின் A2 மற்றும் B8 ஸ்கூட்டரின் விலை ரூ.52,499 முதல் துவங்கி ரூ.88,999 (எக்ஸ்ஷோரூம்) வரை விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் மட்டும் கிடைக்கின்றது.
இந்த பிரசத்தி பெற்ற பேட்டரி ஸ்கூட்டர்களை தவிர பல்வேறு குறைந்த ரேஞ்சு பெற்ற ஸ்கூட்டர்கள் நாட்டின் பல்வேறு முன்னணி நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
குறிப்பாக BattRe லோஇவி, Iot, ஹீரோ Nyx-HX ஸ்கூட்டர், Gemopai Miso உட்பட பல்வேறு சிறிய ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஒன் எலக்ட்ரிக் க்ரீடன்
ஒன் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் பைக் மாடலான ரெட்ரோ ஸ்டைல் வடிவத்தைப் பெற்ற க்ரீடன் மின்சார பைக் ரூ.1.29 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 95 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை பெற்ற மிக வேகமான மாடலாக விளங்குகின்றது. சென்னையில் ஜனவரி 2021 முதல் கிடைக்க துவங்க உள்ளது.