இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பேட்டரி இல்லாமல் மின்சார வாகனங்களை விற்பனை செய்ய மற்றும் வாகனப் பதிவு செய்ய அனுமதி வழங்கும் வகையிலான திருத்தத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுப்பிய அனைத்து மாநில போக்குவரத்து அதிகாரிகளுக்கான அனுப்பிய சுற்றறிக்கையில், “மின்சார இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வண்டி வாகனங்களை விற்பனையை மேம்படுத்துவதற்காக, செலவை குறைப்பதற்காக பரிந்துரைகளில் ஒன்றாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சார வாகன செலவில் பேட்டரி மட்டும் வாகனத்தின் விலையில் 30-40 சதவிகிதமாக உள்ளது. இங்கே குறிப்பிடதக்கதாகும்.
மேலும் இநத எலெக்ட்ரிக் வாகனங்களில் பொருத்துவதற்கு தனியாக விற்பனை செய்யப்பட உள்ள பேட்டரிகளை கண்டிப்பாக தர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அரசின் அனுமதி பெற்ற பேட்டரி தயாரிப்பாளர்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஸ்வாப்பிங் முறையில் பேட்டரியை பெற்றுள்ள மாடல்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த திருத்தத்தை நாட்டின் முன்னணி ஹீரோ எலக்ட்ரிக் உட்பட ஏதெர் எனர்ஜி போன்ற நிறுவனங்கள் வரவேற்றுள்ளது.