ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஒடிசாவின் இவி (EeVe) நிறுவனத்தின் டெஸரோ (Tesoro) மின்சார பைக் மற்றும் ஃபோர்செட்டி மின்சார ஸ்கூட்டர் என இரு மாடல்களையும் விற்பனைக்கு ஜூலை 2020-ல் கொண்டு வரவுள்ளது.
ஒடிசாவில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் ஆலையில் தயாரிக்கப்படுகின்ற குறைந்த ரேஞ்சு கொண்ட விண்ட், யுவர், ஸ்னியா மற்றும் 4u போன்றவை பல்வேறு மாநிலங்களில் கிடைத்து வரும் நிலையில், அடுத்ததாக இந்நிறுவனம் உயர் வேக ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் பைக் மாடலை வெளிப்படுத்தியுள்ளது.
பாஸ் நிறுவனத்தின் மோட்டாரை கொண்டு தயாரிக்க உள்ளதாக இவி நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த இரு புதிய மாடல்களில் டெஸரோ எலெக்ட்ரிக் பைக் மாடல் மணிக்கு 90 கிமீ – 100 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன், சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 120 கிமீ ரேஞ்சு வழங்கும் என குறிப்பிடப்படுகின்றது.
அடுத்ததாக, இந்நிறுவனம் ரெட்ரோ ஸ்டைலை பெற்ற ஃபோர்செட்டி என்ற மாடல் மணிக்கு 90 கிமீ – 100 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன், சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 120 கிமீ ரேஞ்சு கிடைக்கலாம். ஆனால் இந்நிறுவனம் உறுதியான நுட்பவிபர தகவல்களை வெளியிடவில்லை.
இவி நிறுவனத்தின் குறைந்த ரேஞ்சு பெற்ற அனைத்து ஸ்கூட்டர்களும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களை கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக இந்நிறுவனம் வெளியிட உள்ள மாடல்களும் சீன தயாரிப்புகளாகவே இருக்க வாய்ப்புகள் உள்ளது.