பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற டூகாட்டி ஸ்கிராம்பளர் 1100 புரோ மற்றும் ஸ்கிராம்பளர் 1100 ஸ்போர்ட் புரோ என இரு மாடல்களையும் இந்தியாவில் ரூ.11.95 லட்சம் முதல் ரூ.13.74 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள புதிய மாசு கட்டுப்பாடு விதிகள் பிஎஸ்-6 முறைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட 1079 சிசி ஏர் கூல்டு L-ட்வீன் இன்ஜின் அதிகபட்சமாக 86 ஹெச்பி பவர் மற்றும் 88 என்எம் டார்க் வழங்குகின்றது.
புரோ மற்றும் ஸ்போர்ட் புரோ என இரு மாடல்களும் ஒரே இன்ஜினை பகிர்ந்து கொள்வதுடன், தோற்ற அமைப்பில் ஒரே மாதிராயக இருந்தாலும் ஸ்போரட் புரோ மாடல் சிறப்பு மேட் கருப்பு நிறத்துடன் உயர் ரக Öhlins சஸ்பென்ஷன் மற்றும் லோயர் ஹேண்டில் பார் கொண்டுள்ளது.
மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் டுகாட்டி டிராக்ஷன் கட்டுப்பாடு, மூன்று ரைடிங் மோட் (ஆக்டிவ், ஜர்னி, சிட்டி) மற்றும் போஷின் கார்னிரிங் ஏபிஎஸ் போன்ற எலக்ட்ரானிக்ஸ் உடன் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டரைப் பெறுகின்றன. இரண்டு பைக்குகளிலும் ப்ரெம்போ எம்4 காலிப்பர்ஸ் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டுகாட்டி Scrambler 1100 புரோ ரூ. 11.95 லட்சம் மற்றும் புரோ ஸ்போர்ட் 13.74 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் கிடைக்கின்றது.