இந்தியாவில் கவாஸாகி நிறுவனத்தின் முதல் இரட்டை பயன்பாட்டிற்க்கு ஏற்ற KLX 230 அட்வென்ச்சர் பைக்கின் விலையை ரூ.3.30 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் குறைந்த விலையில் எக்ஸ்பல்ஸ் 200 4வி மற்றும் ஹிமாலயன் 450, யெஸ்டி அட்வென்ச்சர் போன்ற மாடல்கள் உள்ளது.
KLX 230 பைக் மாடலில் 2-வால்வுகளை பெற்ற 233cc ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 18.1hp பவர் 8,000rpm-லும் 18.3Nm டார்க் ஆனது 6,400rpmல் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
பச்சை மற்றும் கிரே என இரு நிறங்களை பெற்றுள்ள இந்திய சந்தைக்கான மாடலின் முன்பக்கத்தில் 37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் பொருத்தப்பட்டு 240 மிமீ பயணிக்கும் அளவுடன் 21 அங்குல டயரில் 265 மிமீ டிஸ்க், பின்புறத்தில் 250 மிமீ பயணிக்கின்ற மோனோஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு 18 அங்குல டயருடன் 220 மிமீ டிஸ்க்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
139 கிலோ மட்டும் எடை கொண்டு 265 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் சிறப்பான வகையில் இயக்க 880 மிமீ இருக்கை உயரத்தை கொண்டுள்ள பைக் மாடலில் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு எல்சிடி கிளஸ்ட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி உள்ளது.