சிம்பிள் எனர்ஜி நிறுவனம் முன்பாக வெளியிட்டிருந்த டாட் ஒன் என்ற மாடலுக்கு மாற்றாக புதிய ஒன் எஸ் என்ற பெயரில் விற்பனைக்கு ரூ.1,39,999 விலையில் வெளியிட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 181 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ் பெற்றுள்ளது.
சமீபத்தில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது ஸ்கூட்டர் வரிசை புதுப்பித்து வருவதுடன் டெலிவரியை விரைவுப்படுத்தவும், டீலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க துவங்கியுள்ளதால், சில மாதங்களுக்கு முன்பாக சிம்பிள் ஒன் மாடலை ரூ.1.67 லட்சத்தில் வெளியிட்டிருந்தது.
3.7Kwh பேட்டரி பொருத்தப்பட்டு PMSM எலக்ட்ரிக் மோட்டார் 8.5 kW (11.4 bhp) பவர் மற்றும் 72 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 0 முதல் 40 கிமீ வேகத்தை 2.77 வினாடிகளில் எட்டும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 105 கிமீ ஆக உள்ள நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 181 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மற்றபடி டிசைன் உட்பட பெரும்பாலான வசதிகளை விற்பனையில் உள்ள சிம்பிள் ஒன் மாடலில் இருந்து பகிர்ந்து கொண்டு இருபக்கமும் CBS பிரேக் உடன் முன்புறத்தில் 200mm மற்றும் 190mm பின்புறத்தில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு 90/90 டியூப்லெஸ் டயர் கொண்ட 12-இன்ச் அலாய் வீல் பெற்றுள்ளது.