மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் செயல்படுகின்ற பிஎஸ்ஏ நிறுவனம் சந்தையில் விற்பனை செய்து வருகின்ற கோல்டுஸ்டார் 650 அடிப்படையில் ஆஃப்ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையில் B65 என்ற பெயரில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விற்பனைக்கு மார்ச் 2025ல் இந்தியாவில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட என்ஃபீல்டின் பியர் 650 பைக்கினை எதிர்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ள ஒற்றை சிலிண்டர் 650சிசி எஞ்சின் உட்பட பல்வேறு மெக்கானிக் பாகங்கள் அனைத்தும் கோல்டுஸ்டார் 650ல் இருந்து பெற்றுள்ளது.
652சிசி ஒற்றை சிலிண்டர் லிக்யூடூ கூல்டு எஞ்சின் அதிகபட்ச பவரை 6500RPM-ல் 45 Hp , 4000RPM-ல் 55 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ரோட்ஸ்டெர் பைக்கிலிருந்து மாறுபட்ட ஸ்கிராம்பளர் வகைக்கு ஏற்ப முன்புறத்தில் 19 அங்குல வீல் பெற்று பின்புறத்தில் 17 அங்குல வீல் கொண்டு ஆஃப் ரோடு சாலைகளில் பயன்படுத்தும் வகையில் பைரேலி ஸ்கார்ப்பியன் ரேலி STR டயர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இருக்கையில் உயரம் கோல்டு ஸ்டாரை விட 40மிமீ வரை உயர்த்தப்பட்டு 820 மிமீ ஆக உள்ளது. எடை 218 கிலோ ஆக உள்ள நிலையில் யெஸ்டி ஜாவா பைக்குகளில் உள்ளதை போன்ற டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றதாக அமைந்துள்ளது.
image source – facebook / Neil Edgley