அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு வெளியாக உள்ள புதிய மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பிஎஸ்6 டூரர் பைக்கிற்கான முன்பதிவு துவங்கப்பட்டு குறிப்பிட்ட சில டீலர்கள் மூலம் ரூ.5,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.
புதிதாக வரவுள்ள மோஜோ 300 பைக்கின் தோற்ற அமைப்பில் பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லாமல் சிறிய அளவிலான ஸ்டைலிங் ட்விக்ஸ் மட்டும் பெற்றதாக அமைந்து கூடுதலாக நான்கு புதிய நிறங்கள் மட்டும் பெறுவது உறுதியாகியுள்ளது.
மோஜோ 300 பைக்கில் 295cc லிக்யூடு கூல்டு எஃப்ஐ இன்ஜின் பொருத்தப்பட்டு பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணையாக மாற்றப்பட்டிருக்கும். 26 ஹெச்பி குதிரைத்திறனை 7500rpm சுழற்சியிலும், 28 என்ம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வரவுள்ளது. பிஎஸ்4 என்ஜினை விட பிஎஸ்6 மாடல் சற்று பவர் குறைவாக அமைந்திருக்கும்.
இந்த பைக்கில் பைரெல்லி டயர்களுடன் கூடுதலாக பிரேக்கிங் சிஸ்டத்தில் 320 மிமீ மற்றும் 240 மிமீ டிஸ்க்குகளை முறையே பைபிரே நிறுவன காலிப்பர்களுடன் கொண்டதாக அமைந்திருக்கும்.
பிஎஸ்-6 இன்ஜின் பெற்று விற்பனைக்கு வரவுள்ள புதிய மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் விலை ரூ.1.80 லட்சத்தில் துவங்கலாம்.