நாடு முழுவதும் ஊரடங்க உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஆன்லைன் வாயிலாக மஹிந்திரா நிறுவனத்தின் பிஎஸ்-6 ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500, அல்டூராஸ் ஜி4 போன்ற மாடல்களுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
சாங்யாங் ரெக்ஸ்டான் அடிப்படையிலான பிரீமியம் எஸ்யூவி மாடலான அல்டூராஸ் ஜி4 காரில் 2.2 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 178bhp பவர் 420Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு ஆல் வீல் டிரைவ் மற்றும் டூ வீல் டிரைவ் கிடைக்கப் பெறலாம். ஆன்லைன் முன்பதிவு துவங்கப்பட்டுள மாடல் ஆல் வீல் டிரைவ் வேரியண்ட் ஆகும். முன்பதிவு கட்டணமாக ரூ.50,000 வசூலிக்கப்படுகின்றது.
மேலும், ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 என இரு மாடல்களுக்கும் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது முன்பதிவு கட்டனமாக ரூ.5,000 வசூலிக்கப்படுகின்றது.