பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜினை பெற்றுள்ள கேடிஎம் 125 டியூக், 200 டியூக், கேடிஎம் 250 டியூக் மற்றும் 390 டியூக் என நான்கு மாடல்களை வெளியிட்டுள்ளது. இதுதவிர, ஆர்சி 125, ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 போன்ற மாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது.
முந்தைய 200 டியூக் மாடலை விட பல்வேறு மேம்பாடுகளை பெற்றுள்ளது. குறிப்பாக புதிய ஹெட்லைட் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பெட்ரோல் டேங்க் பெற்றுள்ளது. இதுதவிர தற்போது 13.5 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக பெட்ரோல் கலன் உள்ளது.
125 டியூக் மாடலில் 124.5 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் 9,250 ஆர்.பி.எம்-ல் 14.5 ஹெச்பி பவர் மற்றும் 8,000 ஆர்.பி.எம்-ல் 12 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது.
200 டியூக் பைக்கில் 199.5 சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் 10,000 ஆர்.பி.எம்-ல் 25 ஹெச்பி பவர் மற்றும் 8,000 ஆர்.பி.எம்-ல் மணிக்கு 19.2 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது.
250 டியூக் 248.8 சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் 10,000 ஆர்.பி.எம்-ல் 30 ஹெச்பி பவர் மற்றும் 8,000 ஆர்.பி.எம்-ல் மணிக்கு 24 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது.
390 டியூக் பைக்கில் 373.3 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 9,000 ஆர்.பி.எம்-ல் 43.5 ஹெச்பி பவர் மற்றும் 7,000 ஆர்.பி.எம்-ல் 36 என்எம் டார்க்கை உருவாக்குகிறது.
தற்போது மூன்று மாடல்களிலும் புதிய பாடி கிராபிக்ஸ், புதிய நிறங்கள் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் அனைத்து மாடலிலும் உள்ளது.
கேடிஎம் 125 டியூக் ரூ. 1,38,041
கேடிஎம் 200 டியூக் ரூ. 1,72,749
கேடிஎம் 250 டியூக் ரூ. 2,00,576
கேடிஎம் 390 டியூக் ரூ. 2,52,928
(எக்ஸ்ஷோரூம்)