பிஎஸ் 6 இன்ஜின் பெற்ற புதிய கவாஸாகி Z650 பைக்கின் விலை ரூபாய் 5.94 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.25,000 வரை விலை உயர்த்தப்பட்டு பல்வேறு புதிய மாற்றங்களையும் பெற்றதாக அமைந்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட கவாஸாகி இசட் 650 பைக்கின் டிசைன் அமைப்பு ‘Sugomi’ வடிவ தாத்பரியத்தை கொண்டு புதிய எல்இடி ஹெட்லைட், பாடி கிராபிக்ஸ், 4.3 அங்குல TFT இன்ஸ்டூருமெண்ட் கிளஸ்ட்டர் பெற்ற ப்ளூடூத் ஆதரவினை கொண்டுள்ளது.
ஸ்டீரிட் ஃபைட்டர் பைக் மாடலில் அதிகபட்சமாக 68 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 649 சிசி பேரலல் ட்வீன் லிக்யூடூ கூல்டு DOHC, 8 வால்வு பெற்ற இன்ஜின் பொருத்தப்பட்டு 64 Nm டார்க்கினை வழங்கும். இதில் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனுடன் கூடிய 6 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.
இந்த பைக்கின் முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் பின்புறத்தில் ப்ரீ லோட் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பரையும் பெற்று விளங்குகின்றது. முன்பக்க டயரில் 300 மிமீ டூயல் டிஸ்க் பரேக் வசதியுடன் பின்புறத்தில் 220 மீமீ ஒற்றை டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பின்புற டயரில் பெற்றுள்ளது.