Bike News ரூ.1.06 லட்சத்தில் ஹோண்டா எக்ஸ்-பிளேடு விற்பனைக்கு வெளியானது Last updated: 7,July 2020 2:37 pm IST MR.Durai Share ஹோண்டா எக்ஸ்-பிளேடு பிஎஸ்-6ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிதாக மேம்பட்ட பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற எக்ஸ்-பிளேடு பைக் ரூ.1.06 லட்சம் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கிள் டிஸ்க் மற்றும் டூயல் டிஸ்க் என இரு விதமான வேரியண்டில் கிடைக்க துவங்கியுள்ளது.கார்புரேட்டர் என்ஜினுக்கு மாற்றாக வந்துள்ள PGM-FI HET (Honda Eco Technology) நுட்பத்தினை கொண்டுள்ளது. 162.7 சிசி என்ஜின் அதிகபட்சமாக 13.67 hp பவர், 14.7 NM டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட டார்க் அதிகபட்சமாக 0.8 என்எம் வரை வெளிப்படுத்துகின்றது.தோற்ற அமைப்பில் பெரிதாக மாற்றங்கள் இல்லாமல், பெட்ரோல் டேங்கின் ஷோர்ட்சில் நிறத்தில் எந்த மாற்றங்களும் இல்லை. மற்றபடி, டேங்க், டெயில் பகுதி போன்றவற்றில் பாடி கிராபிக்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்-பிளேடு பைக்கில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் பெற்றுள்ளது. மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் கூடுதலாக சர்வீஸ் இன்டிகேட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் கொண்டுள்ளது.டைமண்ட் ஃபிரேம் கொடுக்கப்பட்டு டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் உடன் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரை பெற்றதாக அமைந்துள்ளது. முன்புறத்தில் 276 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் பிரேக் கொண்டுள்ளது. சிங்கிள் டிஸ்க் மாடல் 143 கிலோவும், டூயல் டிஸ்க் மாடல் 144 கிலோ கொண்டிருக்கின்றது.ஹோண்டா எக்ஸ்-பிளேடுஹோண்டா எக்ஸ்-பிளேடு போட்டியாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 4 வி (ரூ .1,02,950 முதல்), சுசுகி ஜிக்ஸர் (ரூ. 1,11,900), யமஹா எஃப்இசட் வி 3.0 (ரூ .99,700) மற்றும் யமஹா எஃப்இசட் வி 3.0 (ரூ .99,700) புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் (ரூ. 1 லட்சம் முதல்) துவங்குகின்றது.ஹோண்டா எக்ஸ்-பிளேடு விலை பட்டியல்X-Blade – ரூ.1,06,495 (single disc)X-Blade – ரூ.1,10,776 (dual disc)(எக்ஸ்ஷோரூம் சென்னை) TAGGED:Honda X-Blade Share This Article Facebook Previous Article ரூ.4.16 லட்சத்தில் ரெனால்ட் க்விட் RXL விற்பனைக்கு வெளியானது Next Article ரூ.1.99 லட்சத்தில் பிஎஸ்-6 பெனெல்லி இம்பீரியல் 400 விற்பனைக்கு அறிமுகம்