பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற ஃபேரிங் ஸ்டைல் கொண்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக்கின் விபரத்தை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்படவில்லை.
முந்தைய மாடலின் தோற்ற அமைப்பு மற்றும் நிறங்களில் மாற்றம் இல்லாமல் முழுமையான ஃபேரிங் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக்கில் கருப்பு நிற அலாய் வீல், ஒற்றை இருக்கை, டெயில் செக்ஷன் என பல்வேறு அம்சங்களை பெற்றதாக அமைந்துள்ளது.
இப்போது ஆயில் கூலர் பெற்ற 200சிசி என்ஜின் அதிகபட்சமாக 18.08 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 16.4 Nm முறுக்குவிசை திறனை கொண்டதாக விளங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது.
ப்ளூடூத் ஆதரவை பெற்ற இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் மூலம் டரன் பை டர்ன் நேவிகேஷன் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கியர் பொசிஷன் இன்டிகேட்டர், டிரிப்மீட்டர், ஓடோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர், சர்வீஸ் இன்டரவெல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.
37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், 7 வழி முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. 17 அங்குல வீல் கொண்டு 276 மிமீ டிஸ்க் முன்புறத்தில், 220 மிமீ டிஸ்க் பின்புறத்தில் வழங்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் அதிகார்ப்பூர்வ விலையை அடுத்த சில நாட்களில் அறிவிக்க உள்ளது. எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக்கின் விலை ரூ.1.15 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம்) அமைந்திருக்கலாம். முந்தைய பிஎஸ-4 மாடலை விட ரூ.13,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
web title : BS6 Hero Xtreme 200S details updated