பஜாஜ் ஆட்டோவின் பிரசத்தி பெற்ற ஃபேரிங் ஸ்போர்ட்டிவ் மாடலான பல்சர் ஆர்எஸ் 200 பைக்கில் பிஎஸ்6 என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோற்ற அமைப்பில் எந்த மாறுதல்களும் பெறவில்லை.
முன்பே எஃப்ஐ என்ஜின் பெற்றதாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஆர்எஸ் 200-ல் கூடுதலாக பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற மாடலில் உள்ள அதே 199.5 சிசி என்ஜின் பெற்று அதிகபட்சமாக 24.1hp பவரை 9,750rpm-ல் மற்றும் 18.6Nm டார்க்கினை 8,000rpm மூலம் வழங்குகின்றது.
முன்புறத்தில் 300மிமீ பட்டர்ஃபிளை டிஸ்க் பிரேக் பின்புறத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் சஸ்பென்ஷன் அமைப்பு, பின்புறத்தில் நைட்ராக்ஸ் மோனோ சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.
ரூ.3,000 வரை விலை உயர்த்தப்பட்டு பிஎஸ்6 பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 விலை ரூ.1.43 லட்சம் என நிர்ணையிக்கப்பட்டுள்ளது.