பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பவர் க்ரூஸர் மாடல் டோமினார் 400 பைக்கின் என்ஜின் பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு முறை முன்பே விலை உயர்த்தப்பட்ட டோமினாரின் விலை ரூபாய் 1750 வரை உயர்ந்துள்ளது.
பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டிருக்கின்ற டோமினார் 400 பைக்கில் எஃப்ஐ மற்றும் எக்ஸ்ஹாஸ்ட் முறையில் மட்டும் மாற்றம் கொண்டிருக்கின்றது. மற்றபடி எந்தவொரு மாற்றங்களும் இல்லை. 2019 டாமினார் 400 பைக்கின் பவர் அதிகரிக்கப்பட்டு 39.9 பிஎஸ் பவருடன் DOHC பெற்றதாக வந்துள்ள மாடலின் டார்க் தொடர்ந்து 35 என்எம் ஆக உள்ளது.
சமீபத்தில் வெளியான புதிய மாடல் 373 சிசி என்ஜின் மூன்று ஸ்பார்க் பிளக்குகளுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டு பவர் 4.9 PS வரை அதிகரிக்கப்பட்டு , தற்போது 39.9 PS பவரினை 8650 ஆர்பிஎம் மூலம் வெளிப்படுத்துகின்றது. சிறப்பான வகையில் டார்க் சார்ந்த மேம்பாட்டை பெற்று 7000 ஆர்பிஎம்-ல் 35 Nm வழங்குகின்றது. டார்கில் மாற்றங்கள் இல்லை. அதே போல 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது.
அடுத்த சில வாரங்களில் இந்த மாடலின் அடிப்படையில் டோமினார் 250 விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிஎஸ் 6 பஜாஜ் டோமினார் 400 விலை ரூ.1.91 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆகும்.