ஏப்ரல் 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான பைக்குகளை யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் நவம்பர் மாத மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ள நிலையில் FZ, FZS மற்றும் ஆர்15 மாடல்களின் பவர் விபரங்கள் வெளியாகியுள்ளது. பிஎஸ் 6 மாடல்கள் விற்பனையில் உள்ள மாடலை விட 10-15 % விலை உயர்த்தப்பட உள்ளது.
பிஎஸ் 6 யமஹா YZF-R15 விபரம்
வரவிருக்கும், BS-VI மாசு உமிழ்வுக்கு இணக்கமான YZF-R15 பைக்கின் 155cc என்ஜின் பவர் 13.7 கிலோவாட் அல்லது 18.64 பிஎஸ் வழங்கும் என ஆவணம் வெளிப்படுத்துகிறது. BS-IV பைக் மாடல், யமஹா YZF-R15 V3.0 அதிகபட்ச சக்தியை 14.2 கிலோவாட் அல்லது 19.3 பிஎஸ் வெளிப்படுத்தியது. வேரியபிள் வால்வு ஆக்சுவேஷன் (வி.வி.ஏ) தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இது ஆறு வேக டிரான்ஸ்மிஷனுடன் ஸ்லிப்பர் கிளட்ச் கொண்டுள்ளது.
மற்றபடி தோற்ற அமைப்பில் பெரிதான மாற்றங்கள் இருக்க வாய்பில்லை. கூடுதலாக பாடி கிராபிக்ஸ் மட்டும் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிஎஸ் 6 யமஹா FZ , FZS விபரம்
BS-VI மாசு உமிழ்வுக்கு இணக்கமான FZ மற்றும் FZS அதன் 149 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட், 2-வால்வு, மூலம் பவர் 9.1 கிலோவாட் அல்லது 12.4 பிஎஸ் வெளிப்படுத்தும். BS-IV பைக் மாடல், 9.7 கிலோவாட் அல்லது 13.2 பிஎஸ் அதிகபட்ச சக்தியை வழங்குகின்து. இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும். மூன்று பைக்குகளின் பவரும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்பே இந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தபடி பிஎஸ் 6 மாடல்கள் நவம்பர் மாதம் விற்பனைக்கு வெளியாக உள்ளது. விற்பனைக்கு வரும்போது கூடுதலாக இந்த மாடல்களில் சைடு ஸ்டேண்ட் உள்ள சமயங்களில் ஸ்டார்ட் ஆகுவதனை தடுக்கும் வசதியுடன் விற்பனையில் உள்ள மாடல்களை விட 10-15 % வரை விலை உயர்த்தப்பட்டிருக்கும்.
உதவி – indianautosblog