இந்திய சந்தையில் அதிகார்வப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ள ஜெர்மனி நாட்டின் பிஎம்டபிள்யூ மோட்டோரேட் நிறுவனத்தின் பைக்குகளின் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ மோட்டோரேட்
- பிஎம்டபிள்யூ மோட்டார்டு பைக்குகள் ஸ்போர்ட்ஸ், டூரிங், ரோட்ஸ்டெர், ஹெரிடேஜ் மற்றும் அட்வென்ச்சர் என 5 விதமான ஆப்ஷனில் வந்துள்ளது.
- முதற்கட்டமாக நான்கு முன்னணி நகரங்களில் தொடங்கப்பட உள்ளது.
- ரூ. 14.90 லட்சம் ஆரம்ப விலையில் பிஎம்டபிள்யூ ஆர் 1000 ஆர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் அதிகார்வப்பூர்வமாக களமிறங்க உள்ள பிஎம்டபிள்யூ மோட்டார் சைக்கிள் நிறுவனம் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றம் அகமதாபாத் போன்ற நகரங்களில் டீலர்களை திறக்க உள்ளது.
ஸ்போர்ட்ஸ், டூரிங், ரோட்ஸ்டெர், ஹெரிடேஜ் மற்றும் அட்வென்ச்சர் என 5 விதமான பிரிவுகளில் மோட்டார் சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மாடல்கள் கிடைக்க உள்ளது.
விற்பனைக்கு வந்துள்ள மாடல்களின் விபரம் பிஎம்டபிள்யூ S 1000 RR, பிஎம்டபிள்யூ R 1200 RS, பிஎம்டபிள்யூ R 1200 RT, பிஎம்டபிள்யூ K 1600 GTL, பிஎம்டபிள்யூ R 1200 R, பிஎம்டபிள்யூ S 1000 R, பிஎம்டபிள்யூ R NineT, பிஎம்டபிள்யூ R NineT ஸ்க்ராம்பளர், பிஎம்டபிள்யூ R 1200 G S அட்வென்ச்சர், பிஎம்டபிள்யூ R 1200 GS மற்றும் பிஎம்டபிள்யூ S 1000 XR.
ரூபாய் 14.90 லட்சம் முதல் ரூபாய் 28.50 லட்சம் வரை அறிமுகம் செய்யப்பட்டுள்ள பைக்குகளில் தொடக்கநிலை ஸ்போர்ட்டிவ் மாடலும் டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாக்கப்பட்ட முதல் மாடலான பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் விலை விபரம் அறிவிக்கப்படவில்லை. இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது பண்டிகை காலத்திற்கு முன்னதாகவோ விற்பனைக்கு வரலாம்.
2017 பிஎம்டபிள்யூ மோட்டோரேட் இந்தியா விலை முழுபட்டியல்