இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் விலை உயர்ந்த சூப்பர் பைக் மாடலான M 1000 RR மற்றும் கூடுதல் வசதிகள் பெற்ற M Competition பேக்கேஜ் கொண்ட மாடல் ரூ.55 லட்சம் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சூப்பர்பைக் உலக சாம்பியன்ஷிப்பின் சாலைகளில் பயன்படுத்துவதற்குஏற்ற மாடலாகும். (WSBK என்றும் அழைக்கப்படுகிறது).
BMW M 1000 RR
பிஎம்டபிள்யூ M 1000 RR பைக்கில் 14,500rpm-ல் 212hp மற்றும் 11,000rpm-ல் 113Nm டார்க் வழங்கும் லிக்யூடு கூல்டு, 999cc, இன்லைன் நான்கு இன்ஜின் ஆகும். டார்க் அப்படியே இருக்கும் போது, 2023 S1000 RR Pro M Sport பைக்குடன் ஒப்பிடும்போது, பவர் 2hp அதிகரித்துள்ளது. (மேலும் 750rpm அதிகமாக உள்ளது).
BMW M 1000 RR பைக்கின் டாப் ஸ்பீடு 306 kmph வேகத்தில் செல்லும் மற்றும் 0-100 kmph இலிருந்து சுமார் 3.1 வினாடிகளில் தொடும். சஸ்பென்ஷனில் முன்பக்கத்தில் 45 மிமீ அப் சைடு ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் பெற்றுள்ளது
இதில் 7 ரைடிங் மோடுகள் (அவற்றில் 3 முழுமையாக தனிப்பயனாக்கக்கூடியவை), மாறக்கூடிய ஏபிஎஸ் மற்றும் இழுவைக் கட்டுப்பாடு ஆகியவை அடங்கும், இவை அனைத்தும் 6.5-இன்ச் வண்ண TFT டேஷ் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.
வாடிக்கையாளர், மேலும் ஸ்போர்ட்டிவான அனுபவத்தை பெற விரும்பினால் எம் தொகுப்பிற்காக கூடுதலாக ரூ.6 லட்சம் செலவு செய்யலாம். ஜிபிஎஸ் டேட்டாலாக்கர், பில்லெட் மெஷினட் எம் பாகங்கள் , சக்கரங்களுக்கான கார்பன்-ஃபைபர் ஏரோ கவர்கள் மற்றும் இலகு எடை உலோக ஸ்விங்கார்ம் உள்ளது.
இரண்டு மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன மற்றும் டெலிவரி நவம்பர் 2023 இல் தொடங்கும்.
- 2023 பிஎம்டபிள்யூ M 1000 RR விலை ரூ. 49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- 2023 பிஎம்டபிள்யூ M 1000 RR M Competion விலை ரூ. 55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
சமீபத்தில் விற்பனைக்கு ரூ.70 லட்சத்தில் வந்த டூகாட்டி பனிகேல் வி4 ஆர் மாடலை எதிர்கொள்ளுகின்றது.