அதிநவீன ஸ்போர்ட்டிவ் வசதிகளை பெற்ற பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் விலை உயர்ந்த சூப்பர் பைக் மாடலான M 1000 R மற்றும் கூடுதல் வசதிகள் பெற்ற M Competition பேக்கேஜ் கொண்ட மாடல் ரூ.38 லட்சம் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாக விற்பனைக்கு வெளியிடப்பட்ட முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்ட M 1000 RR பைக் ரூ.55 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது எம் பெர்ஃபாமென்ஸ் மாடலாகும்.
BMW M 1000 R
முன்பாக வந்த பிஎம்டபிள்யூ M 1000 RR பைக்கில் உள்ள என்ஜினை பகிர்ந்து கொள்ளும் M 1000 R மாடல் 14,500rpm-ல் 212hp மற்றும் 11,000rpm-ல் 113Nm டார்க் வழங்கும் லிக்யூடு கூல்டு, 999cc, இன்லைன் நான்கு இன்ஜின் ஆகும். டார்க் அப்படியே இருக்கும் போது, 2023 S1000 RR Pro M Sport பைக்குடன் ஒப்பிடும்போது, பவர் 2hp அதிகரித்துள்ளது. (மேலும் 750rpm அதிகமாக உள்ளது).
புதிய பிஎம்டபிள்யூ M 1000 விலை ரூ. 33 லட்சத்தில் தொடங்குகிறது. மேலும், கூடுதலாக 5 லட்சம் ரூபாய் செலுத்தினால் M காம்பெட்டிஷன் பேக் விலை உள்ளது. இதன் மூலம் கார்பன் ஃபைபர் அலாய் வீல், பல்வேறு கார்பன் ஃபைபர் மற்றும் பில்லெட் அலுமினிய பாகம், எம் ஃபுட்பெக்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.
- 2023 பிஎம்டபிள்யூ M 1000 R விலை ரூ. 33 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- 2023 பிஎம்டபிள்யூ M 1000 R M Competion விலை ரூ. 38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
முன்பதிவு தற்பொழுது துவங்கப்பட்டுள்ள நிலையில், டெலிவரி ஜனவரி 2024-ல் தொடங்கும்.