பெனெல்லி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிட உள்ள பிரீமியம் அட்வென்ச்சர் TRK 552 மற்றும் TRK 552X என இரண்டும் முந்தைய மாடலை விட மிகவும் சக்திவாய்ந்த மற்றும் கூடுதல் ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றதாக வெளியாகியுள்ளது.
விற்பனையில் உள்ள ரூ.6.50 லட்சம் மதிப்புள்ள TRK 502X மாடலுக்கு மாற்றாக புதிய TRK 552,552X என இரு மாடல்களும் 61hp பவரை வெளிப்படுத்துகின்ற 552சிசி பேரலல் ட்வீன் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது 55Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ளது.
825 மிமீ இருக்கை உயரம் கொண்டுள்ள அட்வென்ச்சரில் முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் என இரண்டும் Marzocchi ஆக உள்ளது. இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் எலக்ட்ரானிக் கண்ட்ரோல் சார்ந்த அம்சங்களை பெற்றுள்ளது.
முன்புறம் 19 அங்குல வீல், மற்றும் பின்புறம் 17 அங்குல் வீல் என இருபக்கத்திலும் ஸ்போக் வீல் பெற்றாலும் டியூப்லெஸ் டயர் வழங்கப்பட்டுள்ளது. முற்றிலும் மேம்பட்ட புதிய டிசைனை பெறுகின்ற TRK 552 அட்வென்ச்சரில் இரட்டை பிரிவு எல்இடி லைட், 5 அங்குல TFT கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.
இந்திய சந்தைக்கு புதிய பெனல்லி TRK 552 மற்றும் TRK 552X நடப்பு ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியிடப்படலாம்.