பெனெல்லியின் ஸ்கிராம்பளர் ஸ்டலை மோட்டார்சைக்கிள் மாடலாக லியோன்சினோ 500 மாடல் ரூபாய் 4 லட்சத்து 79 ஆயிரம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது நாடு முழுவதும் உள்ள இந்நிறுவனத்தின் டீலர்கள் மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் CKD (Completely Knocked Down) முறையில் விற்பனை செய்யப்பட உள்ள லியோன்சினோ 500 பைக் மிகவும் ஸ்டைலிஷான ரெட்ரோ தோற்ற அமைப்பினை வெளிப்படுத்துகின்ற ஸ்கிராம்பளர் வகை மாடலாகும். நேரடியாக இந்த பைக்கிற்கான போட்டியாளர்கள் நம் நாட்டில் இல்லை. மேலும் சர்வதேச அளவில் 3 வேரியன்ட்களில் விற்பனை செய்யப்பட்டாலும் Standard, Trail, Sport. இந்தியாவில் ஸ்டாண்டர்டு மாடல்தான் வெளியிடப்பட்டுள்ளது.
எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குடன் கூடிய வட்ட வடிவ ஹெட்லேம்ப் கொண்டு எல்.சி.டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் விளங்குகின்றது. மேலும், லியான்சினோ 500 மாடலில் ஸ்டைலான 12.7 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு பெற்றுள்ளது. இதன் பின்புற டெயில் பகுதியில் எல்இடி டெயில் லேம்ப் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்களும் உள்ளன. மேலும், பெனெல்லி லியான்சினோ 500 பைக்கில் டயர் ஹக்கருடன் நம்பர் பிளேட் வழங்கப்பட்டுள்ளது.
499.6 சிசி ட்வின் சிலிண்டர் என்ஜின், லிக்விட் கூலிங் ஃப்யூல் இன்ஜெக்ஷன் அதிகபட்சமாக 47.6bhp@8,500rpm பவர் மற்றும் 45Nm@5,000rpm டார்க்கை வெளிப்படுத்துகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
டியூப்லர் ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃபிரேமில் வடிவமைக்கப்பட்டு முன்பக்கத்தில் 50mm USD ஃபோர்க் 17 இன்ச் அலாய் வீல்கள் கொண்டு, பின்பக்கத்தில் மோனோஷாக் மற்றும் பிரேக்கிங் திறனில் 320mm ட்வின் டிஸ்க்ஸ் மற்றும் ஒற்றை டிஸ்க் 260 மிமீ பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் வந்துள்ளது.
இந்தியாவில் பெனெல்லி லியோன்சினோ 500-ன் விலை 4.79 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.