பஜாஜ் ஆட்டோவின் பிரசத்தி பெற்ற மாடல்களில் ஒன்றான பஜாஜ் V15 பைக் மாடலின் உற்பத்தி நிறுத்தப்படிருப்பதுடன், சந்தையிலிருந்து முழுமையாக நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்கப்பலின் மெட்டல் பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட மாடல் என்ற பெருமையுடன் வெளியிடப்பட்ட வி15 மாடல் அறிமுகத்தின் போது பெற்ற வரவேற்பினை தொடர்ந்து பெற தவறியது. மேலும் 125 சிசி என்ஜின் பெற்ற மாடலை வி12 என்ற பெயரில் வெளியிட்டிருந்தது.
ஐஎன்எஸ் விக்ராந்த் மெட்டல் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டு வரும் பஜாஜ் வி வரிசையில் இடம்பெற்ற பவர் அப் என்ற பெயரில் வி15 மாடலில் 149.5 cc ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 12.8 bhp பவர், 13 NM டார்க் செயல்திறன் கொண்டுள்ளது. இது முந்தைய வி15 மாடலை விட 1 bhp பவர் மற்றும் 0.3 NM டார்க் கூடுதலாக வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த பைக்கில் முக்கிய மாற்றமாக கியர் ஷிஃப்ட் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, முதல் கியர் மட்டும் ஷிஃப்ட் டவுன், மற்ற நான்கு கியர்களுக்கு ஷிஃப்ட் அப் பேட்டரன் வகையில் வழங்கப்பட்டுள்ளது. முன்பாக அனைத்து கியர்களும் ஷிஃப்ட் அப் முறையில் வழங்கப்பட்டது.
125சிசி அல்லது அதற்கு மேற்பட்ட பைக்குகளில் ஏபிஎஸ், 125சிசிக்கு குறைவான மாடல்களில் சிபிஎஸ் இணைக்கப்பட வேண்டும் என்பதனால், தற்போது வரை ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்படாத காரணத்தால் வி15 உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது. வரும் மாதங்களில் புதுப்பிக்கப்பட்ட பஜாஜ் வி12 சிபிஎஸ் பிரேக் கொண்டதாக இணைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.