பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், அர்பனைட் ஸ்கூட்டர் பிராண்டு மாடலில் வரவுள்ள புதிய ஸ்கூட்டரின் வரைபடம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்கூட்டர் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் என இரு வகையில் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
சர்வதேச அளவில் 70 நாடுகளுக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகின்ற இந்தியாவின் பஜாஜ் ஆட்டோவின் , புதிய அடையாளமாக ” உலகின் மிக விருப்பமான இந்தியன் ” (The World’s Favourite Indian) என்ற டேக்லைனை உருவாக்கியுள்ளது.
பஜாஜின் முதல் ஸ்கூட்டர் மாடல் எலக்ட்ரிக் வெர்ஷனாக அமைதிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அடுத்ததாக பெட்ரோல் என்ஜின் அடிப்படையிலும் அர்பனைட் ஸ்கூட்டர் மாடல் வெளியாகலாம் என பைக் வாலா உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த பிராண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் உட்பட ஒரு வீல் எலக்ட்ரிக் அர்பன் கான்செப்ட் மற்றும் மடிக்ககூடிய பைக் மாடல்களையும் உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த வருடத்தில் அனேகமாக புதிய எலக்ட்ரிக் பிராண்டு அர்பனைட் வெளியிடப்பட உள்ளது.
இந்த ஸ்கூட்டர் தொடர்பான எந்த முக்கிய விபரங்கள் மற்றும் பவர் , டார்க் வருகை தொடர்பான விபரங்கள் அர்பனைட் பிராண்டு பற்றி எந்த தகவலும் அதிகார்வப்பூர்வமாக வெளியாகவில்லை.
பட உதவி – bikewale