வரும் 2020 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர் மாடல் விற்பனைக்கு வெளியாகும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. அர்பனைட் பிராண்ட் பிரத்தியேகமான எலெக்ட்ரிக் டூ வீலர் பிராண்டாக விளங்கும் என குறிப்பிடப்படுகின்றது.
எலக்ட்ரிக் கார் சந்தையில் பிரபலமாக விளங்கும் டெஸ்லா கார் நிறுவனத்தைப் போல இந்தியாவில் எலெக்ட்ரிக் டூ வீலர் சந்தையில் விளங்குவதனை நோக்கமாக கொண்டுள்ளதாக ராஜீவ் பஜாஜ் குறிப்பிட்டுள்ளார்.
பஜாஜ் அர்பனைட்
இன்றைக்கும் இந்தியாவில் பிரபலமாக பேசப்படுகின்ற ஸ்கூட்டர்களில் மிக முக்கியமான மாடல் பஜாஜ் சேட்டக் ஆகும். கடந்த 13 ஆண்டுகளாக ஸ்கூட்டர் தயாரிப்பிலிருந்து விலகியிருந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாயிலாக சந்தைக்கு வரவுள்ளது.
முதல்முறையாக சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தபடுகின்ற பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் படங்கள் இணையத்தில் காண கிடைக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் நுட்பவிபரங்கள் போன்றவை இதுவரை கிடைக்கப் பெறவில்லை. சோதனையில் ஈடுபட்டுள்ள அர்பனைட் ஸ்கூட்டரின் பின்புறத்தில் இரு பிரிவுகளை கொண்ட எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டு, ரெட்ரோ தோற்றத்துடன் கூடிய நவீனத்துவமான ஸ்கூட்டராக இந்த மாடல் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பல்வேறு ஸ்மார்ட் டெக் வசதிகளை கொண்டதாக வெளிவரவுள்ள பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர் இந்த ஆண்டின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு வெளியாகலாம்.
image source – powerdrift and motorbeam