அடுத்த சில மாதங்ங்களுக்குள் விற்பனைக்கு வரவிருக்கும் ட்ரையம்ப்-பஜாஜ் நிறுவனத்தின் முதல் பைக் மாடலான ஸ்கிராம்பளர் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் புதிய படங்களின் மூலம் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ட்ரையம்ப் இந்திய டீலர்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. முதல் பைக் மாடல் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அறிமுகம் செய்யப்படலாம்.
சோதனை ஓடத்தில் ஈடுபடுகின்ற ஸ்கிராம்பளர் பைக்கில் லிக்யூடு கூல்டு ஒரு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 300-400cc இடையே அமைந்திருக்கலாம். சோதனை ஓட்டத்த்தின் போது 150 கிமீ வேகத்தை பயணிப்பதனால் சிறப்பான பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தலாம்.
மேலே லக்கேஜ் பாக்ஸ், சேடில் பேக் மற்றும் டேங்கின் மேலே பை என பல்வேறு ஆக்செரீஸ் பாகங்கள் கொண்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளின் முன்புறத்தில் 19-இன்ச் வீல் மற்றும் 17-இன்ச் பின்புற மல்டி-ஸ்போக் அலாய் வீல் பெற்று ஆன்-ரோடு மற்றும் ஆஃப்-ரோடு சாகசங்களுக்கு ஏற்ற டயரை பெற்றுள்ளது.
ஸ்பை படத்தில் கிடைத்துள்ள மற்றொரு முக்கிய அம்சம் செமி-டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றுள்ளது. இதில் அனலாக் டேகோமீட்டர் கொண்ட எல்சிடி யூனிட் ஆக இருக்கலாம்.
43 மிமீ யூஎஸ்டி முன்புற ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் உடன் 320 மிமீ டிஸ்க் மற்றும் 270 மிமீ பின்புற டிஸ்க் பிரேக்குகளுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் பெற வாய்ப்புள்ளது.
அனேகமாக, பஜாஜ்-ட்ரையம்ப் கூட்டணியில் வரவுள்ள பைக் மாடல்கள் விற்பனைக்கு ரூ.2.50 லட்சத்தில் விலை துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
image source