பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் தற்போது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்ற மாடல் விற்பனைக்கு கிடைக்கும் நிலையில் கூடுதலாக டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற மாடல் பிஎஸ்4 என்ஜினில் வெளியாகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான நடைமுறையை ஏப்ரல் 2020 முன்பாக மாற்றப்பட உள்ள நிலையில் ஜனவரி முதல் பஜாஜ் தனது பைக்குகளில் பிஎஸ்6 என்ஜினை வெளியிட உள்ளது. வேறு எந்த மாற்றங்களும் இல்லாமல் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கை மட்டும் பெற உள்ளது.
தற்போது விற்பனையில் உள்ள பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் 24.5 ஹெச்பி பவர் மற்றும் 18.6 என்எம் டார்க் வெளிப்படுத்தும் பிஎஸ்4 மாசு உமிழ்வுக்கு இணக்கமான 200சிசி என்ஜின் பெற்றுள்ளது.
சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட மாடலை விட ரூ.1402 வரை விலை உயர்த்தப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற பல்சர் ஆர்எஸ் 200 விலை ரூ. 1,42,014 ஆகும்.
உதவி – bikewale.com