வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பஜாஜ் ஆட்டோ பல்சர் என்எஸ் 160 மற்றும் பல்சர் என்எஸ் 200 பைக்கில் மூன்று புதிய நிறங்கள் மற்றும் பாடி கிராபிக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட சிவப்பு, மற்ற இரண்டு வண்ணங்களும் பளபளப்பான வெள்ளை, ப்ளூ மற்றும் கிரே நிறத்தை கொண்டுள்ளது. குறிப்பாக சேஸ் மற்றும் அலாய் வீல் வெள்ளை நிறத்தில் அமைந்துள்ளது. பாடி கிராபிக்ஸ், கார்பன் ஃபைபர் டெஸ்டரிங் ஃபென்டரில் இணைக்கப்பட்டுள்ளது.
நேக்டூ ஸ்டைல் ஃபேரிங் ரக பல்சர் என்எஸ் 200 மாடலில் இடம்பெற்றுள்ள 199.5 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 24.5 PS பவர் மற்றும் 18.5 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டு, முன் சஸ்பென்ஷன் அமைப்பில் டெலிஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் இணைக்கப்பட்டுள்ளது. 17 அங்குல அலாய் வீல் பஜாஜ் பல்சர் என்எஸ் 200 பைக்கில் இணைக்கப்பட்டுள்ளது.
பல்சர் என்எஸ் 160
பல்சர் என்எஸ் 160 பைக்கில் 160.3cc, 4-வால்வுகளை பெற்ற சிங்கிள் சிலிண்டர் என்ஜினுடன் 17 hp பவர் மற்றும் 14.6 Nm முறுக்கு விசை வெளிபடுத்தும். இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
160 என்எஸ் பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் , பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரை பெற்றுள்ள இந்த மாடலின் முன்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டிருக்கின்றது.
பஜாஜ் பல்சர் என்எஸ் 200 – ரூ.1,31,437
பஜாஜ் பல்சர் என்எஸ் 160 – ரூ.1,09,651
(விற்பனையக விலை சென்னை)
பல்சர் ஆர்எஸ் 200 மாடல் மட்டுமல்லாமல் பல்சர் என்எஸ் 200 மற்றும் என்எஸ் 160 பைக்கிலும் புதிய நிறங்கள் இணைக்கப்பட்டுள்ளது. வரும் 23 ஆம் தேதி முதல் டீலர்களிடம் கிடைக்க துவங்கும்.
web title : Bajaj Pulsar NS200 and pulsar NS160 get new colours