பஜாஜ் ஆட்டோ நிறுவனம் E85 ஃபிளெக்ஸ் ஃப்யூவல் என பெயரிட்டு பல்சர் NS160 பைக்கில் 85 % எத்தனால் கலப்பில் இயங்கும் பைக்கினை 2024 பஜாஜ் மொபைலிட்டி எக்ஸ்போவில் காட்சிக்கு கொண்டு வந்திருந்தது.
பரவலாக இந்திய பைக் தயாரிப்பாளர்கள் பெட்ரோலுக்கு மாற்றாக பேட்டரி மற்றும் எத்தனாலை முன்னிறுத்த துவங்கி உள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பரவலாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
Bajaj Pulsar NS160 E85 Flex Fuel
பல்சர் என்எஸ் 160 பைக்கில் தயாரிக்கப்பட்டுள்ள ஃபிளெக்ஸ் ஃப்யூவல் நுட்பத்தை பெற்ற 160.3cc ஒற்றை சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் 4 வால்வுகளை கொண்டு 9,000 rpm சுழற்சியில் 17.03 bhp பவர் மற்றும் 7,250 rpm சுழற்சியில் டார்க் 14.6 Nm வெளிப்படுத்துகின்றது. இதில் ஐந்து வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
மற்றபடி, தோற்ற அமைப்பு மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அப் சைடு டவுன் ஃபோர்க் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 100/80-17 டயர் மற்றும் பின்புறத்தில் 130/70-17 டயர் வழங்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் மத்தியில் எத்தனால் பைக் வெளியிட திட்டமிருக்கின்ற நிலையில் உலகின் முதல் சிஎன்ஜி பைக் மாடலை பஜாஜ் ஆட்டோ வரும் 2024-2025 ஆம் நிதியாண்டில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.