பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், பல்சர் பைக் வரிசையில் உள்ள பஜாஜ் பல்சர் NS160 மாடலில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இணைத்து விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் கொண்டு வர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்திய டூ வீலர் வாகன சந்தையில் 125சிசிக்கு குறைந்த மாடல்களில் சிபிஎஸ் பிரேக் எனப்படுகின்ற கம்பைன்டு பிரேக் மற்றும் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் 125சிசி க்கு மேற்பட்ட மாடல்களில் பொருத்தப்பட்டு விற்பனைக்கு செய்வது கட்டாயமாகும்.
பஜாஜ் பல்சர் NS160
125 சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட அவென்ஜர் மற்றும் பல்சர் வரிசை மாடல்களில் ஏபிஎஸ் பிரேக் இணைத்துள்ள பஜாஜ் நிறுவனம், தற்போது வரை 160 சிசி என்ஜின் கொண்ட என்எஸ்160 மாடலில் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பினை இதுவரை இணைக்கவில்லை.
தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி பல்சர் என்எஸ்16 பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டு அடுத்த சில வாரங்களுக்குள் சந்தைக்கு விற்பனைக்கு வெளியிட வாய்ப்புள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
160.3cc, 4-வால்வுகளை பெற்ற சிங்கிள் சிலிண்டர் என்ஜினுடன் 15.5 hp குதிரைத்திறன் மற்றும் 14.6Nm முறுக்கு விசை வெளிபடுத்தும். இந்த மாடலில் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் 142 கிலோ எடை கொண்டாதாக இருக்கும்.
பஜாஜ் பல்சர் NS160, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V, அப்பாச்சி RTR 160, ஹோண்டா சிபி ஹார்னெட் மற்றும் சுசூகி கிக்ஸ்சர் பைக்களுக்கு போட்டியாக இருக்கின்றது. தற்போது பல்சர் NS160 ரூ.85,939 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டால் ரூ.10,000 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.