பல்சர் 250 மாடலை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள பஜாஜ் பல்சர் N160 பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ரூபாய் 1.23 லட்சத்தில் வந்துள்ளது.
பல்சர் N250 பைக்கின் தோற்ற அமைப்பில் இருக்கிறது.
என்160 மோட்டார்சைக்கிளில் இரட்டை எல்இடி ரன்னிங் விளக்கு கொண்ட புரொஜெக்டர் ஹெட்லேம்ப், கூர்மையான டேங்க் நீட்டிப்பு, இன்ஜின் பாதுகாப்பிற்கான அண்டர்பெல்லி கவுல், ஸ்டப்பி எக்ஸாஸ்ட், மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் எல்இடி டெயில் லேம்ப் ஆகியவை இடம்பெற்றுள்ளன. வண்ண விருப்பங்களில் பிரிவின் முதல் இரட்டை சேனல் ஏபிஎஸ் மாறுபாடு புரூக்ளின் பிளாக் நிறத்தில் மட்டுமே வழங்கப்படும்.
சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மாடல் கரீபியன் ப்ளூ, ரேசிங் ரெட் மற்றும் புரூக்ளின் பிளாக் ஆகிய மூன்று வண்ண நிறங்களில் கிடைக்கும்.
பல்சர் N160 பைக்கில் 164.82சிசி, சிங்கிள்-சிலிண்டர், நான்கு-ஸ்ட்ரோக், ஆயில்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்ட் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 15.7 பிஎச்பி மற்றும் 14.6 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோவின் Pulsar N160 பைக்கின் முன்புறத்தில் 37mm டெலிஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. 17 அங்குல வீல் வழங்கப்பட்டு 100/80-17 முன்புற டயர், 130/70-17 பின்புற டயர் வழங்கப்பட்டுள்ளது. 300mm முன்புற டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் அல்லது 280mm முன்புற டிஸ்க் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றபடி பொதுவாக பின்புறத்தில் 230mm டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. 152 கிலோ எடையைக் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது. 154 கிலோ எடையைக் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.
Bajaj Pulsar N160 Price:
Single Channel ABS Rs. 1,22,854/-
Dual Channel ABS Rs. 1,27,853/-
All prices, ex-showroom, New Delhi