பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பல்சர் வரிசையில் உள்ள 180F பைக்கின் செமி ஃபேரிங் நீக்கப்பட்டு பல்சர் 180 பைக் டீலர்களை வந்தடைந்துள்ளதால் விரைவில் விலை அறிவிக்கப்பட உள்ளது.
பல ஆண்டுகளாக தொடர்ந்து டிசைன் அம்சத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், விற்பனை செய்யப்பட்டு வருகின்ற பல்சர் பைக்குகளில் முன்பாக விற்பனை செய்யப்பட்ட பல்சர் 180 நீக்கப்பட்ட நிலையில், செமி ஃபேரிங் செய்யப்பட்ட பல்சர் 180எஃப் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
பல்சர் 125, பல்சர் 150 போன்ற டிசைன் அம்சத்தை தக்கவைத்துக் கொண்டு டீலர்களை வந்தடைந்துள்ள பல்சர் 180 பைக்கில் Fi பெற்று 17 PS பவர் வெளிப்படுத்துகின்ற 178 சிசி என்ஜின் டார்க் 14.2 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
முன்புறத்தில் பல்சர் 180 மாடலில் 280 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டிருக்கின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது.
விற்பனையில் கிடைத்து வருகின்ற பஜாஜ் பல்சர் 180எஃப் விலை ரூ.1.14 லட்சம் ஆக விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், இந்த மாடலை விட ரூ.10,000 வரை விலை குறைவாக பஜாஜ் பல்சர் 180 பைக்கின் விலை ரூ.1.04 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட உள்ளது.