பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசை பைக்குகளில் உள்ள பல்சர் 125 நியான் முதல் பல்சர் ஆர்எஸ்200 வரை உள்ள அனைத்து பைக்குகளின் விலையும் பிஎஸ்-6 அறிமுகத்திற்கு பிறகு முதன்முறையாக ரூ.988 முதல் அதிகபட்சமாக ரூ.3501 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இது தவிர இந்நிறுவனத்தின் டாமினார் 400, அவென்ஜர் 160 அவென்ஜர் 220 மற்றும் சிடி 100, சிடி110 போன்றவற்றின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற மாடல்களில் அதிகபட்சமாக பல்சர் ஆர்எஸ் 200 பைக் இப்போது ரூ.3,501 வரை விலை உயர்ந்துள்ளது.
புதிய பஜாஜ் பல்சர் பைக்குகள் விலை பட்டியல்
மாடல் | புதிய விலை (ex-showroom Delhi) | முந்தைய விலை (ex-showroom Delhi) | வித்தியாசம் |
பல்சர் 125 நியான் | Drum: ரூ. 70,995 Disc: ரூ. 75,494 | Drum: ரூ. 69,997 Disc: ரூ. 74,118 | Drum: ரூ.998 Disc:ரூ.1,376 |
பல்சர் 150 | Std:ரூ. 96,960 Twin Disc:ரூ.1,00,838 | Std:ரூ. 94,956 Twin Disc:ரூ. 98,835 | Std:ரூ.2,004 TwinDisc:ரூ.2,560 |
பல்சர் என்எஸ் 160 | ரூ. 1,05,901 | ரூ. 1,03,398 | ரூ. 2,503 |
பல்சர் 180F | ரூ. 1,10,330 | ரூ. 1,07,827 | ரூ. 2,503 |
பல்சர் 220F | ரூ. 1,19,789 | ரூ. 1,17,286 | ரூ. 2,503 |
பல்சர் NS200 | ரூ. 1,28,531 | ரூ. 1,25,030 | ரூ. 3,501 |
பல்சர் RS200 | ரூ. 1,48,467 | ரூ. 1,44,966 | ரூ. 3,501 |