உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் மாடலான பஜாஜ் ஆட்டோவின் ஃப்ரீடம் 125 மாடலின் விலை ரூபாய் 10 ஆயிரம் முறை நடுத்தர வேரியண்டின் விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது. ஏற்கனவே ஆரம்ப நிலை மாடலின் விலை 5 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கூடுதலாக நடுத்தர மாடலின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது . மற்றபடி டாப் வேரியண்டின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.
ஃபீரிடம் 125 பைக்கில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு 9.5 hp பவர் மற்றும் 9.7Nm டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர் பாக்ஸ் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
- NG04 Disc LED – ₹ 1,09,997
- NG04 Drum LED – ₹ 95,002
- NG04 Drum only variant – ₹ 89,997
(ex-showroom)
ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மொத்த விற்பனை எண்ணிக்கை 40,000 யூனிட்டுகளை கடந்துள்ளதாகவும், டீலர்களுக்கு 67,000 யூனிகள் வரை டெலிவரி வழங்கப்பட்டுள்ளதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
2 கிலோ சிஎன்ஜி மூலம் சுமார் 200 கிமீ ரேஞ்ச் வழங்கப்படும் என கூறப்படுகின்ற நிலையில் சராசரியாக 70 முதல் 85 கிமீ வரை கிடைப்பதனால் தோராயமாக 2 கிலோ சிஎன்ஜியில் சுமார் 160-170 கிமீ ரேஞ்ச் கிடைக்கின்றது. ஆனால் சிஎன்ஜி நிரப்புவதிலும் சில நுட்ப கோளாறுகளையும் எதிர்கொண்டு வருகின்றது. அதுபற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளோம்.