இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பஜாஜ் டோமினார் பைக்கின் விலை இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் ஒருமுறை ரூ. 2000 வரை விலை உயர்த்தி பஜாஜ் டாமினார் 400 பைக் ஆரம்ப விலை ரூ. 1.48 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பஜாஜ் டாமினார் 400 பைக்
இந்தியாவில் டிசம்பர் 2016யில் வெளியிடப்பட்ட டாமினார் 400 பைக், அறிமுகம் செய்யப்பட்ட நாளிலிருந்து இதுவரை 5 முறை விலையை இந்நிறுவனம் உயர்த்தியுள்ளது. கடந்த ஜனவரி 2018 யில் வெளியான மேம்படுத்தப்பட்ட டாமினார் 400 பைக் தோற்ற அமைப்பில் மட்டும் சில மாறுதல்களை பெற்றதாக வெளியாகியிருந்த நிலையில் மே மாதம் ரூ. 2,000 வரை விலையை இந்நிறுவனம் உயர்த்தியிருந்த நிலையில் , தற்போது மீண்டும் ரூ. 2000 விலையை உயர்த்தியுள்ளது..
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டிருந்த மாதம் 10,000 டாமினார் இலக்கை இதுவரை இந்நிறுவனம், ஒரு முறைக்கூட 3000 எண்ணிக்கையை கடக்காத நிலையில் தொடர்ந்து பல்வேறு தருனங்களில் ரூ. 10,000 வரை அறிமுக விலையை விட கூடுதலாக அதிகரித்துள்ளது.
டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்தினை கொண்டு 34.5 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 373சிசி டியூக் 390 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை பெற்றுள்ளது. இதன் டார்க் 35 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் மற்றும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனும் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். டாமினார் 400 பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 148 கிலோமீட்டர் ஆகும்.
முன்பக்கத்தில் 43மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை பெற்று பின்பக்கத்தில் மல்டிஸ்டெப் மோனோஷாக் அப்சார்பரினை கொண்டுள்ளது. எம்ஆர்ஃஎப் சி1 டயர்களை பெற்றுள்ள டோமினார் 400 பைக்கின் முன்பக்க டயர் அளவு – 110/70 R17 Radial பின்பக்கம் டயர் அளவு 150/60 R17 Radial அளவினை பெற்றுள்ளது. முன்பக்க டயரில் 320 மிமீ சிங்கிள் டிஸ்க்பிரேக் மற்றும்
பின்பக்க டயரில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்று டியூவல் சேனல் ஏபிஎஸ் மாடலை நிரந்தர அம்சமாக கொண்டுள்ளது.
விலை விபரம்
டோமினார் 400 பைக் விலை ரூ. 1.48,111 லட்சம் (ஏபிஎஸ் இல்லாத மாடல்)
பஜாஜ் டோமினார் 400 பைக் விலை ரூ. 1.62,272 லட்சம் ( ட்வீன் சேனல் ஏபிஎஸ் மாடல்)
(தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம்)