பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற பஜாஜ் டோமினார் 400 பைக்கின் விலை இப்போது மீண்டும் ரூ.1,507 வரை உயர்த்தப்பட்டு ரூ.1.96 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
டோமினார் 400 வெளியிடப்பட்ட நான்கு ஆண்டுகளில் ரூ.35,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் பஜாஜின் குறைந்த திறன் 250சிசி பெற்ற டோமினார் விலை உயர்த்தப்பட்டு ரூ.1.64 லட்சம் ஆக உள்ளது.
டொமினார் 400 பைக்கின் என்ஜின் 390 டியூக் மாடலில் இருந்து பெற்ற 373.27cc ஒற்றை சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டார் பிஎஸ்6 முறையில் அதிகபட்சமாக 40hp பவர், 35 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது.
டோமினாரின் 400 மாடலில் 43 மிமீ விட்டம் பெற்ற யூ.எஸ்.டி டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்றதாக 135 மிமீ பயணிக்கும் திறனை பெற்றுள்ளது. பின்புறத்தில் நைட்ரக்ஸ் மோனோ ஷாக் அப்சார்பர் இரண்டிலும் ஒரே மாதிரியாக வழங்கப்பட்டுள்ளது.
டோமினார் 400 மாடலில் முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது.
பஜாஜ் டோமினார் 400 விலை ரூ.1.96 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)
பஜாஜ் டோமினார் 250 Vs டோமினார் 400 – எந்த பைக் பெஸ்ட் சாய்ஸ் ?