பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டோமினார் 250 பைக்கின் விலை ரூ.16,500 வரை குறைக்கப்பட்டுள்ளது. முன்பாக விற்பனை செய்யப்பட்டு வந்த விலை ரூ.1.71 லட்சமாக இருந்தது. எனவே டோமினார் 400 பைக்கை விட ரூ.60,000 வரை விலை குறைவாக அமைந்துள்ளது.
டொமினார் 250 மாடலில் உள்ள என்ஜின் 250 டியூக் மாடலில் பெறப்பட்டு ரீடியூன் செய்யப்பட்டு, 248.77cc ஒற்றை சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டார் பிஎஸ்6 முறையில் அதிகபட்சமாக 27hp பவர், 23.5 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 132 கிமீ வேகத்தை எட்டும் திறனுடன், 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 11.5 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.
முழுமையான எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர்,டோமினார் 250 பைக்கில் 300 மிமீ டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது. சிறிய அளவிலான டயரை டோமினார் 250 பைக்கில் முன்புறத்தில் 100/80-17″ மற்றும் பின்புறத்தில் 130/70-17″ வழங்கப்பட்டுள்ளது.
புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விலை ரூ.1.54 லட்சம்