பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.22,000 வரை குறைக்கப்பட்டுள்ளதால், தற்பொழுது விலை ரூ.1.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் போட்டியாளர்களாக ஓலா S1 ஏர், ஓலா S1X, ஏதெர் 450S, மற்றும் விடா வி1 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. முன்பாக 6 விதமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் சேட்டக் இப்பொழுது மேட் கிரே, மேட் கரீபியன் ப்ளூ மற்றும் சாடின் பிளாக் என 3 விதமான நிறங்களில் கிடைக்கின்றது.
பஜாஜ் சேட்டக் மின்சார ஸ்கூட்டரில் ஹில் ஹோல்ட் அசிஸ்ட், கீலெஸ் என்ட்ரி மற்றும் மொபைல் போன் யூஎஸ்பி சார்ஜர் போன்ற பல அம்சங்களுடன் MyChetak ஆப் பயன்படுத்தி ஸ்கூட்டரை உங்கள் மொபைலுடன் இணைக்க முடியும். இதன் மூலமாக சார்ஜிங் இருப்பு, ரேஞ்ச் சரிபார்க்க, வாகன நிறுத்துமிடம் உங்கள் ஸ்கூட்டரைக் கண்டறியப் பயன்படும். ஸ்கூட்டர் கவிழும் போதோ அல்லது விபத்து ஏற்படும் சமயத்தில் அவசர எண்ணிற்கு அறிவிப்பை பெறுவார்கள்.
சேட்டக் மாடலில் 3 கட்ட PMSM அதிகபட்சமாக 5 bhp பவர் மற்றும் 20 Nm டார்க் வழங்குகின்றது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 63 கிமீ ஆகும். 2.9 kwh பேட்டரி பெற்ற மாடல் சிங்கிள் சார்ஜில் 90 கிமீ ரேஞ்சு வழங்கும். இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகும்.
2023 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தமிழ்நாட்டின் விலை ரூ. 1,37,811 (ஆன்-ரோடு தமிழ்நாடு)