பஜாஜ் ஆட்டோவின் புதிய சேத்தக் 35 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 3501, 3502 மற்றும் 3503 என மூன்றின் வித்தியாசங்கள் மற்றும் பேட்டரி, ரேஞ்ச், நுட்பவிபரங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக மூன்று ஸ்கூட்டர்களில் 3.5Kwh NMC பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 153 கிமீ வழங்கும் என IDC சான்றிதழை 3501, 3502 என இரண்டு மாடலும் அதிகபட்சமாக மணிக்கு 73 கிமீ பெற்றுள்ளது. புதிய சேத்தக் இ-ஸ்கூட்டரில் சேஸ், பேட்டரி, மோட்டார் மற்றும் கண்ட்ரோலர் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
Chetak 3501
- 3.5 KWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்ச ரேஞ்ச் 153 கிமீ சொல்லப்பட்டாலும் நிகழ்நேரத்தில் 110-125 கிமீ கிடைக்கலாம்.
- ECO & Sports என இரு விதமான ரைடிங் மோடு பெற்று அதிபட்ச வேகம் மணிக்கு 73 கிமீ ஆகும்.
- டெக்பேக் அல்லாத வேரியண்டில் ஒற்றை ஈக்கோ மோடு மட்டுமே உள்ளது.
- டாக்மென்ட் ஸ்டோரேஜ், கால், எஸ்எம்எஸ் அலர்ட் இசை உள்ளிட்ட அம்சங்கள் டெக்பேக்கில் மட்டும் கிடைக்கும்.
- TFT தொடுதிரை அம்சத்துடன் கூடிய பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் உள்ளது.
- 950W ஆன்-போர்டு சார்ஜரின் மூலம் 0-80 % சார்ஜ் ஏற 3 மணி நேரம் போதுமானதாகும்.
- FOB ரிமோட் கீ பெறுகின்ற இந்த மாடலில் 35 லிட்டர் பூட்ஸ்பேஸ் உள்ளது.
- சிவப்பு, கருப்பு, ப்ளூ, பிஸ்தா பச்சை, மற்றம் ஹாசல் நட் என 5 நிறங்கள் கிடைக்கும்.
- சேத்தக் 3501 ஸ்கூட்டரின் தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,32,000 ஆகும்.
Chetak 3502
- 3501 மாடலை போலவே 3.5 KWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்ச ரேஞ்ச் 153 கிமீ சொல்லப்பட்டாலும் நிகழ்நேரத்தில் 110-125 கிமீ கிடைக்கலாம்.
- ECO & Sports என இரு விதமான ரைடிங் மோடு பெற்று அதிபட்ச வேகம் மணிக்கு 73 கிமீ ஆகும்.
- டெக்பேக் அல்லாத வேரியண்டில் ஒற்றை ஈக்கோ மோடு மட்டுமே உள்ளது.
- மெக்கானிக்கல் கீ வழங்கப்பட்டுள்ளது.
- கலர் TFT அம்சத்துடன் கூடிய பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் பெற டெக்பேக் கட்டாயமாகும்.
- ஆஃப்-போர்டு சார்ஜரின் மூலம் 0-80 % சார்ஜ் ஏற 3 மணி நேரம் 25 நிமிடங்கள் போதுமானதாகும்.
- கருப்பு, கிரே, வெள்ளை மற்றும் நீலம் என நான்கு நிறங்கள் வரவுள்ளது.
- சேத்தக் 3502 ஸ்கூட்டரின் தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,20,000 ஆகும்.
Chetak 3503
- குறைந்த விலை 3503 மாடலிலும போலவே 3.5 KWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டலாம், ஆனால் இந்த மாடலின் ரேஞ்ச் விபரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
- மெக்கானிக்கல் கீ கொடுக்கப்பட்டு, இரு பக்க டயரிலும் டிரம் பிரேக் பெற உள்ளது.
- சாதாரன எல்சிடி கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு, மிக குறைவான கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெறலாம்.
- விலை மற்றும் ரேஞ்ச் தொடர்பாக எந்த தகவலும் தற்பொழுது வெளியாகவில்லை.