Bike News பஜாஜின் 2025 பல்சர் RS200 பைக்கில் என்ன எதிர்பார்க்கலாம்..! Last updated: 31,December 2024 7:23 pm IST MR.Durai Share 2025 பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 டீசர்தொடர்ந்து டீசர்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அடுத்த சில நாட்களில் பஜாஜ் ஆட்டோவின் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய பல்சர் ஆர்எஸ் 200 பைக் விற்பனைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.தோற்ற அமைப்பில் பெரிதாக மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படும் நிலையில், கூடுதலான பாடி கிராபிக்ஸ் மற்றும் முழுமையான புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆனது பெற்று பல்வேறு கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றது இதில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், இசை கட்டுப்பாடு, மற்றும் கால், எஸ்எம்எஸ் அலர்ட் பல்வேறு வசதிகளை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஆர்எஸ் 200 பைக்கில் 24 bhp பவரை வழங்கும் 199.5cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 18.7Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.டிசைன் அமைப்பில் பெரிதாக மேம்பாடுகள் இருக்குமா என்பது குறித்து எந்த தகவலும் தற்பொழுது இல்லை மற்றபடி வசதிகளில் சில மாறுபட்டதாக அமைந்திருக்கலாம் மேலும் புதிய நிறங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட் லைட் பொருத்தப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.தற்பொழுது விற்பனையில் உள்ள பல்சர் RS200 மாடலின் ஆரம்ப விலை ரூபாய் 1.75 லட்சம் ஆக உள்ள நிலையில் சற்று விலை கூடுதலாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. TAGGED:Bajaj Pulsar RS 200 Share This Article Facebook Previous Article ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 அறிமுகம் எப்பொழுது..? Next Article QC1 மற்றும் ஆக்டிவா e ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்கிய ஹோண்டா