பஜாஜ் ஆட்டோ மற்றும் ட்ரையம்ப் நிறுவனத்தின் கூட்டணியில் நடுத்தர மோட்டார்சைக்கிள் பிரிவில் புதிய பைக்குகளை மிக சவாலான விலையில் தயாரித்து இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 15 ட்ரையம்ப் டீலர்களை பஜாஜ் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதால் முதல் பைக் விற்பனைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ட்ரையம்ப் ரோட்ஸ்டெர் பைக்
பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் சர்மா, “டிரையம்ப் & பஜாஜ் ஆட்டோ கூட்டணி பற்றி கூறுகையில், இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில் முதல் மாடல் விற்பனைக்கு நெருங்கி வருவதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பஜாஜ் ஆட்டோ குடும்பத்தின் கீழ் ட்ரையம்ப் டீலர்ஷிப்களை நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் போர்ட்ஃபோலியோ விரிவடையும் போது அவர்களின் வணிகத்தை மேலும் உயர்த்த வாய்ப்பை வழங்குகிறோம். விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள, புதிய மோட்டார்சைக்கிள்களுக்கான தயாரிப்பில், இந்தியாவில் உள்ள பிரத்யேக ட்ரையம்ப் ஸ்டோர்களை விரைவாக விரிவுபடுத்த எங்களின் வலிமையை பயன்படுத்துவோம். என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ட்ரையம்ப் டீலர்ஷிப் எண்ணிக்கையை 120க்கு மேல் விரிவுபடுத்த பஜாஜ் திட்டமிட்டுள்ளது.
புதிய ட்ரையம்ப் ரோட்ஸ்டெர் பைக்கில் இடம்பெற உள்ள என்ஜின் சுமார் 400cc ஆக இருக்கும், ட்ரையம்ப் ரோட்ஸ்டெர் போன்வில்லே பைக்குகளை போல அமைந்து தொடக்க நிலை சந்தையில் வரக்கூடிய பைக்கில் அப் சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புற மோனோஷாக் உள்ளது. அதே நேரத்தில் பிரேக்கிங் முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகளை பெற்று டூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் வரக்கூடும்.
அக்டோபர் 2023-ல் முதன்மையாக ட்ரையம்ப் குறைந்த விலை பைக்குகள் அதிகாரப்பூர்வ வெளியீடு இருக்கலாம். மேலும் பஜாஜ் ஆட்டோவால் தயாரிக்கப்பட உள்ள மாடல்கள் முதல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்படும்.
ரோட்ஸ்டர் மற்றும் ஸ்க்ராம்ப்ளர், என இரண்டு தொடக்க நிலை பைக் மாடல்களை ட்ரையம்ப் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.