Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்புகள்

by ராஜா
11 April 2024, 7:37 am
in Bike News
1
ShareTweetSend

ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஏதெர் எனர்ஜி வெளியிட்டுள்ள புதிய ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் மிக அகலமான மற்றும் நீளமான இருக்கை, சிறப்பான பேட்டரி, ரேஞ்சு விலை உட்பட பல்வேறு அம்சங்களை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

Ather Rizta E scooter

‘family scooter’ என்ற நோக்கத்தை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஏதெர் ரிஸ்டாவில் மிக நேர்த்தியாக கொடுக்கப்பட்டுள்ள அப்ரானில் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு இரு பக்கத்திலும் 12 அங்குல வீல் பெற்றிருக்கின்றது.

பாடி பேனல்கள் சற்று அகலாமாக கொடுக்கப்பட்டு முன்புற ஃபுளோர் போர்ட் தாராளமாக சிறிய அளவிலான சுமைகளை வைக்க ஏதுவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக இரண்டு பெரியவர்கள் மிக தாராளமாக அமர்ந்து செல்ல ஏதுவாக அகலமான இருக்கையுடன் பெரிய பேக் ரெஸ்ட் உடன் பயணிப்பவருக்கு வழங்கியுள்ளது. இருக்கையை இலகுவாக திறக்க ஏதுவாக ஸ்லாட்டும் உள்ளது.

ரிஸ்தா ஸ்கூட்டரின் இருக்கையின் அடிப்பகுதியில் இடவசதி 34 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக அமைந்துள்ளது. முன்புறத்தில் உள்ள அப்ரானில் Frunk மூலம் 22 லிட்டர் கொள்ளளவு என ஒட்டுமொத்தமாக 56 லிட்டர் கொள்ளளவு இடவசதியை பெற்றுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் பின்புறத்தில் தட்டையான தோற்றத்தை வழங்கும் எல்இடி டெயில் விளக்கு உள்ளது.

Rizta பேட்டரி மற்றும் ரேஞ்ச்

ஏதெரின் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக வந்துள்ளது. ஆரம்ப நிலை S வேரியண்ட் 2.9kWh பேக்கை மட்டுமே பெறுகிறது, Z வேரியண்ட் 2.9kWh மற்றும் 3.7kWh இரண்டையும் பெறுகிறது.

2.9kWh பேட்டரி பேக் பெறுகின்ற Rizta ஸ்கூட்டர்123km என IDC குறிப்பிட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 105 கிமீ கிடைக்கும். அதே நேரத்தில் 3.7kWh பேட்டரி பேக் பெறும் வேரியண்ட் 160km என IDC குறிப்பிட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 105 கிமீ கிடைக்கும்.  டாப் ஸ்பீடு 80 கிமீ ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ather RiztaRizta S Rizta ZRizta Z 
மோட்டார் வகைPMSMPMSMPMSM
பேட்டரி2.9Kwh2.9kwh3.7kwh
பவர்4.3kW4.3kW4.3kw
டார்க்22 NM22 NM22 NM
ரேஞ்சு (IDC)123 Km/charge123 Km/charge160Km/ch
ரைடிங் ரேஞ்சு105 Km/charge105 Km/charge125km/ch
அதிகபட்ச வேகம்80 Kmph80 Kmph80 Kmph
சார்ஜிங் நேரம் (0-80%)6 hrs 40 Mins6 hrs 40 mins4 hrs 45 mins
ரைடிங் மோடுZip and SmartEcoZip and SmartEcoZip and SmartEco

Rizta சிறப்பு வசதிகள்

ரிஸ்டாவில் உள்ள பல்வேறு முக்கிய வசதிகளின் விபரம் பின்வருமாறு ;-

ஸ்கிட் கண்ட்ரோல் : இந்த வசதி ஸ்கூட்டர் நிலை தடுமாறுவதனை தடுக்கும் வகையில் சக்கரங்களில் ஸ்பீடு சென்சார் மற்றும் மோட்டாரில் உள்ள ஸ்பீடு சென்சாரும் இணைந்து செயல்பட்டு இரு சக்கரங்களும் ஒரே வேகத்தில் இயங்கி ஸ்கிட் ஆகுவதனை தடுக்க SKid control வசதி உள்ளது.

மேஜிக் ட்விஸ்ட் ; அபெக்ஸ் 450 ஸ்கூட்டரில் முதன்மையாக வெளியிடப்பட்ட மேஜிக் ட்விஸ்ட் என்பது மேம்பட்ட ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், இது ஒரு புதிய பவர் மேலாண்மை இணைக்கப்பட்டு இதற்கு ‘மேஜிக் ட்விஸ்ட்’ என அழைக்கப்படுகிறது. பிரேக் லீவர் உள்ளீடுகள் தேவையில்லாமல் ஸ்கூட்டரை முழுமையாக நிறுத்தும் அளவுக்கு இந்த சிஸ்டம் சக்தி வாய்ந்தது.

AtherStack 6 ; மிக சிறப்பான கனெக்ட்டிவ் வசதிகளை பெறும் வகையில் வாட்ஸ்ஆப், இருப்பிடம், அழைப்புகளை நிராகரிக்கும் வசதி உட்பட பல்வேறு அம்சங்களை வழங்குகின்றது.

Ather Rizta Escooter Price

ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆரம்ப விலை ரூ.1.09 லட்சத்தில் துவங்குகின்றது.

  • Ather Rizta S – ₹ 1,09,000 (Range 123Km)
  • Ather Rizta Z – ₹ 1,29,999 (Range 160Km)
  • Ather Rizta Z – ₹ 1,49,999 (Range 123Km)

Ather Rizta on-road Price in Tamil Nadu

Modelon-Road  Tamil Nadu
Ather Rizta SRs.1,17,312
Ather Rizta Z (2.9kwh)Rs.1,32,561
Ather Rizta ZRs.1,52,837

ஏதெர் Halo ஸ்மார்ட் ஹெல்மெட்

Halo மற்றும் Halo BIT என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள ஸ்மார்ட் ஹெல்மெட்டில் ISI மற்றும் DOT தரச்சான்றிதழ் பெற்று நவீனத்துவமான பல்வேறு வசதிகளில் 2 ஸ்பீக்கர்களுடன் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், இரண்டு வாரங்களுக்கு தாக்கு பிடிக்கும் வகையிலான பேட்டரியுடன் தானாகவே ஹெல்மேட் மற்றும் ஸ்கூட்டர் இணைத்துக் கொள்ளும் வசதி இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்டில் உள்ள பேட்டரி சார்ஜ் செய்வதற்கு வயர்லெஸ் சார்ஜிங் முறையில் பெற இருக்கைக்கு அடிப்பகுதியல் உள்ள பூட் இடத்தில் வைத்தால் தானாகவே சார்ஜ் செய்து கொள்ளும்.

ஏதெர் ஹேலோ ஹெல்மெட்

 

 

Related Motor News

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

Tags: Ather EnergyElectric Scooterஏதெர் ரிஸ்டா
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan