ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக தேதி வெளியானது

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஏதெரின் Rizta ஸ்கூட்டர் குடும்ப பயன்பாடுகளுக்கு ஏற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது.

ஏதெர் ரிஸ்டா டீசர்

அகலமான இருக்கையுடன் இரு நபர்கள் அமர்ந்து செல்லவும் கூடுதலாக சுமைகளை பின்புறத்தில் ஏடுத்துச் செல்ல ஏற்றதாக வரவுள்ள புதிய ஏதெர் எனர்ஜி ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் ஏப்ரல் 6 ஆம் தேதி ஏதெர் (Ather Community Day) கூட்டத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஏதெர் தற்பொழுது வரை எந்த நுட்பவிபரங்களையும் வெளியிடவில்லை, ஆனால் தொடர்ந்து வெளியிடப்படுகின்ற டீசர்களில் மூலம் அகலமான மற்றும் சொகுசான நீண்ட தொலைவு பயணத்துக்கு ஏற்ற இருக்கை, அகலமான ஃபுளோர்போர்ட் உள்ளதால் முன்புறத்திலும் சாமான்களை எடுத்துச் செல்லும் வகையில் உள்ளதாக தொடர்ந்து டீசர்களில் குறிப்பிட்டு வருகின்றது.

ஏதெர் Rizta எதிர்பார்ப்புகள் என்ன;-

ஓலா எஸ் 1 புரோ, டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேட்டக் உள்ளிட்ட மாடல்களை எதிர்க்கொள்ளும் வகையில் அமைந்துள்ளதால் ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரின் விலை ரூ.1.20 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கின்றோம்.

Exit mobile version