2024 ஆம் ஆண்டில் புதிய 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் குடும்பங்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற எலக்டரிக் ஸ்கூட்டர் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருவதனை ஏதெர் எனர்ஜி சிஇஓ தரூன் மெகத்தா உறுதிப்படுத்தியுள்ளார்.
450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடல் பல்வேறு அதிநவீன வசதிகளை கொண்டதாகவும் சற்று கூடுதல் ரேஞ்சு மற்றும் திறன் வாயந்த பேட்டரி கொண்டதாக விளங்க உள்ளது.
Ather Family Escooter
சமீபத்தில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற ஏதெர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் உள்ள டிவிஎஸ் ஐக்யூப் மாடலுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திக்கும் என உறுதியாகியுள்ளது.
சோதனை ஓட்டத்தில் உள்ள மாடல் 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெறக்கூடும். 3.7Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 150 கிமீ தொலைவு பயணிக்கலாம் அடுத்து குறைந்த விலை 2.9Kwh பேட்டரி கொண்ட மாடல் 111 கிமீ ரேஞ்சு வழங்கலாம்.
குடும்பங்களுக்கான புதிய ஏதெர் ஸ்கூட்டர் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Time for a family scooter…. and more!
After spending a decade perfecting the Ather 450, we now believe that there's demand for something more.
So many folks love @atherenergy as a brand but want a bigger, family-oriented scooter from us. That's why we're gearing up to launch…
— Tarun Mehta (@tarunsmehta) November 22, 2023