ஏதெர் எனர்ஜி வெளியிட உள்ள பட்ஜெட் விலை மாடலான Ather 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 115 கிமீ ரேன்ஜ் வழங்கும் என சான்றயளிக்கப்பட்டுள்ளது. 450x மாடலுக்கு இணையான ஸ்டைலிங் அம்சத்தை பெற்றதாக விளங்கலாம்.
விற்பனையில் உள்ள 450x மாடல் விலை FAME 2 மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டது. தற்பொழுது 450 எக்ஸ் விலை ₹ 1,46,664 மற்றும் புரோ பிளஸ் பேக் இணைத்தால் ₹ 1,67,178 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) ஆகும்.
Ather 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
தோற்ற அமைப்பில் விற்பனையில் உள்ள Ather மாடலை விட சிறிய மாற்றங்களை பெற்றதாக 450S விளங்கலாம். தற்பொழுது எந்த உறுதியான வடிவமைப்பு தொடர்பான டீசரும் வெளியிடப்படவில்லை.
450 எக்ஸ் மாடல் IDC வழங்கி சான்றிதழ் படி 146 கிமீ சிங்கிள் சார்ஜ் வழங்கும் என கூறப்பட்ட நிலையில், நிகழ்நேரத்தில் 100 முதல் 110 கிமீ ரேன்ஜ் வழங்கி வருகின்றது. தற்பொழுது 450 எஸ் மாடல் 115 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்நேரத்தில் 80-85 கிமீ வரை ரேன்ஜ் வழங்கலாம். பேட்டரி திறன் 3kWh ஆக பெற்ற ஏதெர் 450S டாப் ஸ்பீடு 90Km/hr ஆக இருக்கும்.
ஏதெர் எனர்ஜி குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவு ஜூலை மாதம் முதல் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில நாட்களில் முன்பதிவு தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம். விநியோகம் குறித்தான தகவல் விரைவில் அறிவிக்கப்படலாம். ஒலா எலக்ட்ரிக் எஸ்1 மாடலுக்கு போட்டியாக அமையலாம்.