குறைந்த விலையில் வெளியாக உள்ள ஏதெர் 450s எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ₹ 1,29,999 ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விற்பனைக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 115 கிமீ ரேன்ஜ் கொண்டதாக வரவுள்ளது.
இந்திய அரசு வழங்கி வந்த FAME-II மானியம் ரூ.30,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏதெர் 450s எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
450 எஸ் மாடல் 115 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்நேரத்தில் 80-85 கிமீ வரை ரேன்ஜ் வழங்கலாம். பேட்டரி திறன் 3kWh ஆக பெற்ற ஏதெர் 450S டாப் ஸ்பீடு 90Km/hr ஆக இருக்கும். ஏதெர் எனர்ஜி குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்படுகின்றது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசரில், 450S மாடல் புளூடூத் இணைப்பு மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் LCD யூனிட் ஆனது ஸ்பீடோமீட்டர் மற்றும் திரையின் மையத்தில் மிகவும் எளிமையான அமைப்பைக் கொண்டுள்ள பெரிய, தடிமனான எழுத்துருவில் ஸ்பீட் காட்டப்பட்டுள்ளது. ரேஞ்சு எண்களிலும் காட்டப்படும்.
ரைடிங் பயன்முறை கன்சோலின் வலது பக்கத்தில் காட்டப்படுவதனால், ஈக்கோ, உள்ளிட்ட பல்வேறு ஒரு சில கூடுதலான ரைடிங் மோட் பெற்று அதே நேரத்தில் ஓடோமீட்டர் இடது புறத்தில் ஹோம் பட்டன் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
விற்பனையில் உள்ள 450x மாடலின் அடிப்படையிலான வேகத்தை பெற்றிருந்தாலும் பேட்டரி குறைக்கப்பட்டுள்ளதால், ரேன்ஜ் குறைவாக அமைந்துள்ளது.