ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் 450X ஸ்கூட்டரை தொடர்ந்து பட்ஜெட் விலையில் 450S அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் கூடுதலாக இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என மொத்தமாக 3 மாடல்களை ஆகஸ்ட் 11 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.
ஏறகனவே, 450எஸ் மாடலுக்கு முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இந்த மாடலின் விலை ரூ.1,29,999 ஆக அறிவிக்கப்படுள்ளது. அடுத்த வரவுள்ள இரண்டு மாடல்களும் 340 என்ற பெயரை பயன்படுத்தலாம்.
Ather 450S price
FAME 2 மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை ரூ.30,000 வரை உயர்ந்த நிலையில், குறைந்த பேட்டரி திறன் கொண்ட மாடல்களை எலக்ட்ரிக் டூ வீல் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.
450 எஸ் மாடல் 115 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்நேரத்தில் 80-85 கிமீ வரை ரேன்ஜ் வழங்கலாம். பேட்டரி திறன் 3kWh ஆக பெற்ற ஏதெர் 450S டாப் ஸ்பீடு 90Km/hr ஆக இருக்கும். ஏதெர் எனர்ஜி குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்படுகின்றது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசரில், 450S மாடல் புளூடூத் இணைப்பு மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் LCD யூனிட் ஆனது ஸ்பீடோமீட்டர் மற்றும் திரையின் மையத்தில் மிகவும் எளிமையான அமைப்பைக் கொண்டுள்ள பெரிய, தடிமனான எழுத்துருவில் ஸ்பீட் காட்டப்பட்டுள்ளது. ரேஞ்சு எண்களிலும் காட்டப்படும்.
நாளை 12 மணிக்கு ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர் அறிமுகம் நேரலையல் ஒளிபரப்படுகின்றது.