ஜனவரி 6 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட்ட உள்ள ஏதெர் எனர்ஜி நிறுவன 450 அபெக்ஸ் மற்றும் 450X HR என இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டகளின் நுட்பவிபரங்கள் வெளியாகியுள்ளது.
450 வரிசையில் வரவிருக்கும் 450X HR மற்றும் மிக வேகமாக ஸ்கூட்டராக வெளியிட உள்ள 450 அபெக்ஸ் மணிக்கு 100 கிமீ வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Ather 450 Apex
ஏதெர் 450 அபெக்ஸ் மாடல் இந்நிறுவனத்தின் மிக வேகமான ஸ்கூட்டர் என குறிப்பிட்டு வரும் நிலையில் மணிக்கு 100 கிமீ ஆனது Wrap+ மோடில் கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய நீல நிறத்துடன் உள்ளிருக்கும் பாகங்கள் வெளிப்படையாக தெரியும் வகையிலான பேனல்கள் பக்கவாட்டில் பெற்றிருக்கலாம்.
7.0kw பவர் மற்றும் 26Nm டார்க் ஆனது 450 அபெக்ஸ் வெளிப்படுத்தும் மாடலில் ஸ்மார்ட் ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் ரேப்+ என நான்கு ரைடிங் மோடுகளை பெற உள்ளது. மற்றபடி, பேட்டரி ஆப்ஷன் ஆனது ஏற்கனவே உள்ள 450X ஸ்கூட்டரின் 3.7 kWh பேட்டரி பொருத்தப்பட்டு நிகழ்நேரத்தில் ஸ்மார்ட் ஈக்கோ ரேஞ்ச் 110 கிமீ வரை வழங்கலாம். 450 அபெக்ஸ் 157 கிமீ ரேஞ்ச் வழங்கும் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. டாப் Wrap+ மோடில் பயணித்தால் ரேஞ்ச் 75 கிமீ வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.
0-100 % சார்ஜிங் ஏறுவதற்கு 5 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகுவதுடன், 0-80 % சார்ஜ் ஏறுவதற்கு 4 மணி நேரம் 30 நிமிடங்கள் தேவைப்படும். கூடுதலாக ஏதெர் 450 அபெக்ஸ் மாடலில் 7 அங்குல TFT கிளஸ்ட்டர் பெற்று ஏதெர் புரோ பேக் மற்றும் பேட்டரி புராடெக்ட் வசதியை பெறுகின்றது.
Ather 450X HR
புதிதாக ஏதெர் 450X HR வேரியண்ட் ஆனது 3.7 kWh பேட்டரி பொருத்தப்பட்டு ரேஞ்ச் 150 கிமீ வழங்கும் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. ஏதெர் 450 எக்ஸ் ஹெச்ஆர் வேரியண்டில் புரோ பேக் ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றது.
இந்த மாடலில் ஸ்மார்ட் ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் ரேப் ஆகிய மோடுகளை பெற்றுள்ளது. 0-100 % சார்ஜிங் ஏறுவதற்கு 5 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகுவதுடன், 0-80 % சார்ஜ் ஏறுவதற்கு 4 மணி நேரம் 30 நிமிடங்கள் தேவைப்படும். கூடுதலாக ஏதெர் 450X HR மாடலில் 7 அங்குல TFT கிளஸ்ட்டர் பெற்று ஏதெர் புரோ பேக் மற்றும் பேட்டரி புராடெக்ட் வசதியை பெறுகின்றது.