ஏப்ரிலியா நிறுவனம் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பெற்ற ஸ்போர்ட்டிவ் RS 457 பைக் மாடல் விற்பனைக்கு ரூ.4.10 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 15 ஆம் தேஇ முதல் முன்பதிவு துவங்கப்படும் நிலையில் டெலிவரி மார்ச் 2024 முதல் துவங்க உள்ளது.
இந்திய பைக் வாரம் 2023 அரங்கில் பல்வேறு சுவாரஸ்யமான பைக்குகள் மற்றும் கஸ்டமைஸ்டு கான்செப்ட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Aprilia RS 457
ஏப்ரிலியா RS457 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 457cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின், இரட்டை கேம்ஷாஃப்ட் டைமிங் கொண்டு ஒவ்வொரு சிலிண்டருக்கு நான்கு வால்வுகளை பெற்று அதிகபட்சமாக 47 hp பவர் வெளிப்படுத்துகின்றது.
சஸ்பென்ஷன் அமைப்பில் முன்பக்கத்தில் 41mm யூஎஸ்டி ஃபோர்க் 120mm பயணிக்கும் வசதியுடன், ப்ரீலோட் அட்ஜெஸ்ட்டிபிட்டி கொண்ட 130mm பயணத்திற்கான ஸ்டீல் ஸ்விங்கார்மில் மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ் 457 பைக்கின் டயர்கள் அளவு 110/70-R17 (முன்) மற்றும் 150/60-R17 (பின்புறம்) பிரேக்கிங் முறையில் 320 மிமீ டிஸ்க் மற்றும் 220 மிமீ டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. 5-இன்ச் TFT கிளஸ்ட்டருடன் கருப்பு, வெள்ளை மற்றும் வெள்ளி ஆகிய மூன்று வண்ணப்பூச்சுகளில் வருகிறது.